குடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது!

January 11, 201911 days 560
  • மக்களவையில் நிறைவேறியிருக்கும் குடிமக்கள் (திருத்த) மசோதா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து 2014-க்கு முன்னால் இந்தியாவில் புகலிடம் தேடி வந்த இந்துக்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்க வழிசெய்கிறது.
  • இந்த மசோதாவில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது. 1971-ல் வங்கதேச விடுதலைக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து வெளியேறி அசாம், திரிபுராவில் குடியேறிய வங்காளி இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கும் தந்திரமே இது என்று அவ்விரு மாநிலத்தவரும் கொதிப்படைந்துள்ளனர்.
  • வங்கதேச விடுதலைப் போரின்போது அகதிகளாக வந்து குடியேறியவர்களின் சுமை முழுவதையும் அசாமே தாங்க வேண்டியிருக்காது என்று பாஜக உறுதியளித்துவந்த நிலையில், இம்மசோதாவின் நோக்கம் முற்றிலும் மாறாக இருப்பதாக அம்மாநிலத்திலிருந்து அதிருப்திக் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.
  • ‘அகதிகளை அதிக மக்கள்தொகையில்லாத பகுதிகளில் குடியமர்த்த அசாம் அரசு உதவ வேண்டும். ஏற்கெனவே மக்கள் அடர்த்தியுள்ள பகுதிகளில் சுமையை ஏற்றக் கூடாது’ என்று ராஜேந்திர அகர்வால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் தன்னுடைய அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. அசாம் கண பரிஷத் கட்சியின் எதிர்ப்புக்கு இதுவும் ஒரு காரணம்.
  • இதற்கிடையே, 1985-ல் கையெழுத்தான அசாம் உடன்படிக்கையின் 6-வது பிரிவைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டுகிறது பாஜக அரசு. ஆறு பெரிய சமூகங்களுக்குப் பழங்குடி இன (எஸ்.டி.) அந்தஸ்து வழங்கவும் முடிவுசெய்திருக்கிறது. இந்தச் சமூகங்கள் இப்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரிவில் உள்ளனர்.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − seven =