ஒடிசா மாநில முதல்வரான நவீன் பட்நாயக் பின்வரும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
கோவிட் – 19 நோய்த் தொற்றுப் போராட்டத்தின் போது இறக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதார நலப் பணியாளர்களுக்கும் “தியாகிகள்” அந்தஸ்து வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு செய்யப் படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர்களுடைய குடும்பத்தினர் ரூ.50 இலட்சம் நிதியை நிவாரணமாகப் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் மருத்துவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்களின் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் கூறியுள்ளார்.