கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கு எதிராகப் போராடும் முன்களப் பணியாளர்கள் இறந்தால், அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையானது தற்பொழுதுள்ள ரூ.10,00,000 என்ற தொகையிலிருந்து ரூ.50,00,000 என்ற தொகையாக அதிகரிக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு முதல்வரான எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்தக் கருணைத் தொகையானது சுகாதாரம், காவல்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத் துறைகளுக்குப் பொருந்தும்.
மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு அரசு வேலை வழங்கப் படும்.
மத்திய அரசானது கோவிட் – 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடும் மருத்துவப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.50,00,000 என நிர்ணயித்துள்ளது.