நாடு முடக்கத்தின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள்
March 30 , 2020
1955 days
603
- வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கு நாடு முடக்கத்திலிருந்து விதி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
- இது நாடு முடக்கத்தின் போது மத்திய உள்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட 2வது அறிவிப்பின் போது வெளியிடப் பட்டது.
- இது விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த நடவடிக்கைகளைத் தடையின்றி மேற்கொள்ள வழி வகை செய்கின்றது.
- மத்திய உள்துறை அமைச்சகமானது மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் சில புதிய விதிகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
- இந்த விதிகளின் கீழ், அந்த நிவாரண நிதியானது இடப்பெயர்வுத் தொழிலாளர்களுக்கான தற்காலிக இருப்பிடம் மற்றும் உணவு ஆகியவை கிடைப்பதற்கு வழி வகை செய்கின்றது.
- ஏறத்தாழ 80 சதவிகித இந்தியத் தொழிலாளர்கள் அமைப்பு சாராத் துறையில் பணியாற்றுகின்றனர். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ளனர்.
Post Views:
603