1. இலக்கணமும் மொழித்திறனும்

January 4, 20184min26971

இலக்கணமும் மொழித்திறனும்

இலக்கணம்

 • நாம் பேசுவதும், எழுதுவதும் மற்றவர்க்கும் புரிய வேண்டும்; நமக்கும் புரிய வேண்டும். அதற்குத்தான் இலக்கணம் தேவைப்படுகிறது.

 

மொழிக்குள் வியப்பு

 • தமிழின் முதல் எழுத்து – அ
 • அ என்ற எழுத்தின் முதுகுக்குப் பின்னால் | என்று ஒரு கோடு இருக்கிறது. உலகத்தில் நூற்றுக்கணக்கான மொழிகளின் முதல் எழுத்தில் இப்படி ஒரு கோடு இருக்கிறது. அ எழுத்து மனிதனைக் குறிக்கிறது. | எனும் முதுகுக்கோடு பழங்காலத்தில் வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூட்டைக் குறிக்கிறது.

 

எழுத்துக்களும் மனிதர்களும்

 • ‘ங்’ என்ற எழுத்துக்குப் பின்னால் ‘க’ இன எழுத்தே வரும் ‘ங்’ ‘க’ இரண்டும் நண்பர்கள்.

(எ.கா.)

 1. சிங்கம்
 2. தங்கை.
 • அதேபோல் ‘ஞ்ச’ இரண்டும் நண்பர்கள். இவ்விரண்டும் சேர்ந்தே வரும்.

(எ.கா.)

 1. மஞ்சள்
 2. அஞ்சாதே
 • ண்ட, ந்த, ம்ப ன்ற – எழுத்துகளும் நண்பர்கள். பெரும்பாலும் இவை சேர்ந்தே வரும்.

(எ.கா)

 1. பண்டம்
 2. பந்தல்
 3. கம்பன்
 4. தென்றல்.
 • நட்பு எழுத்துகளை இன எழுத்துகள் என மரபிலக்கணம் கூறுகிறது.

 

குறில் நெடில்

 • ஓடோடி வந்தான்.

இத்தொடரில் ‘ந்’ மற்றும் ‘ன்’ இரண்டும் மெய் எழுத்துகள். அவற்றை விடுத்து, மீதம் உள்ள எழுத்துக்களில் –

ஓ டோ தா – இவை மூன்றும் நெடில் எழுத்துகள்.

டி வ – இவை இரண்டும் குறில் எழுத்துகள்.

ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு

 • செய், சேய் என்ற இரண்டு சொற்களைப் பாருங்கள்.

செ – இது ஒற்றைக் கொம்பு.

சே – இது இரட்டைக் கொம்பு.

ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பால் பொருள் எப்படி மாறுகிறது பாருங்கள்.

இதைச் செய்;      தாய்சேய் நலவிடுதி.

ச் என்பது மெய்யெழுத்து. எ என்பது உயிரெழுத்து

இரண்டும் சேரும்போது செ, இது குறில்.

ச் உடன் ஏ சேரும்போது சே. இது நெடில்.

பிரித்து அறிதல்

 • பழந்தமிழ் இலக்கியம் நம் செல்வம். பொருள் உணர்வுக்கு ஏற்பப் பிரித்துப் படிக்கத் தெரியாமல் பழந்தமிழ் இலக்கியத்தின் அருமையை நாம் அறிந்துகொள்ள முடியாது. பிரித்துப் படிக்கும் திறமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

(எ.கா.) தமக்குரியர் ® தமக்கு + உரியர்

அன்பீனும் ® அன்பு + ஈனும்

நிழலருமை ® நிழல் + அருமை

சேர்த்து எழுதுதல்

 • சொற்களைச் சேர்த்துப் பேசும் வழக்கமும், எழுதும் வழக்கமும் உள்ளன. அவனெங்கே என்றுதான் கேட்கிறோம். அவன் எங்கே என்று பிரித்துப் பேசுவதில்லை.

(எ.கா.) பருப்பு + உணவு ® பருப்புணவு

கரும்பு + எங்கே ® கரும்பெங்கே

இலக்கணமும் மொழித்திறனும்

 • தமிழிலுள்ள முதல் எழுத்துகள் மொத்தம் முப்பது.
 • உயிர் எழுத்துகள் பன்னிரண்டு.
 • மெய்எழுத்துகள் பதினெட்டு.
 • ஆக மொத்தம் முப்பது.

(எ.கா.) அண்ணா.

அ – உயிரெழுத்து

ண் – மெய்யெழுத்து

ணா – உயிரும் மெய்யும் சேர்ந்து வந்த உயிர்மெய்யெழுத்து.

உயிரும் மெய்யும் சேர்ந்து 216 (இருநூற்றுப் பதினாறு) உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன.

 • அடிப்படையான தமிழ்எழுத்துகள் முப்பது மட்டுமே.
 • அ இ உ எ ஒ – ஆகிய ஐந்தும் குறில் எழுத்துகள். இவை மெய் எழுத்துக்களோடு சேரும்போது, உயிர்மெய்க்குறில் எழுத்துகள் உண்டாகின்றன.
 • கடல், கிளி, குரங்கு, சென்னை, சொல்
 • ஆ ஈ ஊ ஏ ஐ ஒ ஔ – ஏழும் நெடில் எழுத்துகள். இவை மெய்யெழுத்துக்களோடு சேரும்போது உயிர்மெய் நெடில் எழுத்துகள் உண்டாகின்றன.
 • காளை, கீற்று, கூடல், கேள்வி, கை, கோயில், கௌதாரி.

 

– – – – – –

One comment

 • Manoj Kumar

  March 27, 2018 at 1:37 am

  மிக்க பயன் தருகிறது.
  நன்றிகள் நெஞ்சார

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =