TNPSC Thervupettagam

இந்தியாவில் LGBTQ+களின் உரிமைகள் – பகுதி 2

November 19 , 2023 182 days 337 0

(For English version to this please click here)

இந்தியாவில் LGBTQ+ சமூகத்தினரின் உரிமைகள்

மனுதாரர்களால் எழுப்பப்பட்ட வாதங்கள்

  • உரிமைகள் மீறப்படும் போது எந்தவொரு சமூகக் கொள்கையிலும் நீதித் துறையானது தலையிடும் என்று குறிப்பிடப் பட்டது.
  • அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 14 மற்றும் 15 ஆகியவற்றில் குறிப்பிடப் பட்டு ள்ள சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை தொடர்பான உரிமைகளை மனுதாரர்கள் நம்பியுள்ளனர்.
  • பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை அரசியலமைப்புச் சட்டமானது தடை செய்கிறது.
  • பால் வேறுபாடு என்பது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நவ்தேஜ் சிங் ஜோஹர் என்ற வழக்கில் பாலியல் நோக்குநிலையோடு தொடர்புள்ளதாகவும் அதனை உள்ளடக்கியுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தால் விளக்கப்பட்டுள்ளது.
  • இது வேற்றுப் பாலினத் தம்பதிகளுக்கு திருமணம் செய்யும் உரிமையை வழங்குவதோடு, ஓரினச் சேர்க்கை தம்பதிகளுக்கு திருமணம் செய்து கொள்ளும் உரிமையினை அவர்களின் பாலியல் நோக்குநிலையின் அடிப்படையில் மறுப்பது போன்ற பாகுபாட்டினையும் காட்டுகிறது.
  • எனவே, இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 32 என்பதின் படி, அரசியலமைப்பு தீர்வுகளுக்கான உரிமையை உத்தரவாதம் செய்வதோடு உச்ச நீதிமன்றத்தை அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராக நியமிக்கிறது.

  • உச்ச நீதிமன்றத்தினை இவ்வழக்குத் தொடர்பாக அணுகுவதற்கு தங்களுக்கு சகல உரிமைகளும் உண்டு என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.

சம உரிமைகள்

  • எதிர் பாலினத் தம்பதிகளுக்கு இருக்கும் அதே சட்ட உரிமைகளும் பாதுகாப்புகளும் சமத்துவத்திற்கான அடிப்படை உரிமைகளின் கீழ் ஓரினச் சேர்க்கை தம்பதிகளுக்கும் இருத்தல் வேண்டும்

ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்காததால் உரிமைகள் மீறப்படுதல்

  • அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்துகள் 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம், 15 - மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் மற்றும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்கு எதிரான உரிமை, 19 - பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், மற்றும் 21 - உயிர்ப் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றினை வழங்குகின்ற.

வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமை

  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 21 வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்டச் சுதந்திரத்தை உறுதி செய்கிறது.
  • இதில் கண்ணியம், தனியுரிமை மற்றும் தனிப்பட்ட சுயாட்சி ஆகியவையும் அடங்கும்.
  • பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 21 ஆனது உத்தரவாதம் அளித்துள்ள உரிமைகளை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

  • சக்தி வாஹினி எதிர் இந்திய ஒன்றியம் (2018), லதா சிங் எதிர் உத்தரப் பிரதேச மாநிலம் (2006), புட்டசாமி எதிர் இந்திய ஒன்றியம் (2017), ஷஃபின் ஜஹான் எதிர் அசோகன் கே.எம். (2018) மற்றும் லக்ஷ்மிபாய் சந்தராகி பி. எதிர் கர்நாடகா மாநிலம் (2021) ஆகிய வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில், சரத்து 21 ஆனது மணவாழ்வில் தனது துணையினைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

குடும்பங்களை வலுப்படுத்துதல்

  • தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு திருமணமானது, சமூக மற்றும் பொருளாதார நன்மைகளை வழங்குகிறது என்ற நிலையில், அது ஓரினச்சேர்க்கை நபர்களுக்கும் பயனளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.

கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம்

  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 19 ஆனது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்கிறது.
  • அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 19 ஆனது பாலியல் நோக்குநிலை மற்றும் பாலின அடையாளத்தின் முழு வெளிப்பாட்டையும் உள்ளடக்கியது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
  • விகாஸ் யாதவ் எதிர் உத்திரப் பிரதேச மாநிலம் (2016), ஆஷா ரஞ்சன் எதிர் பீகார் மாநிலம் (2017), சக்தி வாஹினி எதிர் இந்திய ஒன்றியம் (2018) மற்றும் ஷபின் ஜஹான் எதிர் அசோகன் கே.எம். (2018) ஆகிய வழக்குகளில் சரத்து 19 என்பதில்  குறிப்பிடப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஒருவர் தனது திருமணத் துணையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இணைந்து வாழும் அடிப்படை உரிமை

  • முன்னதாக, பல நிபுணர்களும் இந்தியத் தலைமை நீதிபதியும் (CJI) இணைந்து வாழ்வது ஒரு அடிப்படை உரிமை என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
  • அத்தகைய உறவுகளின் சமூகத் தாக்கத்தினைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது என்பது அரசாங்கத்தின் ஒரு கடமையாகும்.

உயிரியல் பாலினம் 'முழுமையானது' அல்ல

  • உயிரியல் ரீதியா பாலினம் என்பது முழுமையானது அல்ல என்பதோடு, பாலின அங்கீகாரம் என்பது மிகவும் சிக்கலானது ஆகும்.
  • ஒரு ஆண் அல்லது பெண் என்பதனை குறித்த முழுமையான கருத்துகள் எதுவும் இல்லை.

பாகுபாடு எதிர்ப்பு

  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15வது சரத்தானது பாகுபாடுகளிலிருந்து பாதுகாப்பினை உறுதி செய்கிறது.
  • பாலியல் நோக்குநிலை மற்றும் பாலின அடையாளத்தை உள்ளடக்கிய பாதுகாப்பினை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
  • லெப்டினன்ட் கர்னல் நித்திஷா எதிர் இந்திய ஒன்றியம் (2021) என்ற வழக்கில் கணிசமான சமத்துவக் கொள்கைகளை உச்ச நீதிமன்றமானது அங்கீகரித்துள்ளது.

உலகளாவிய நிலையில் ஏற்றுக் கொள்தல்

  • ஆஸ்திரேலியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய ஒன்றியம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட 34 நாடுகளில் ஒரே பாலினத்தவர்களின் திருமணமானது சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தனியுரிமைக்கான உரிமை

  • புட்டசாமி (2017) வழக்கின் தீர்ப்பில் அரசியலமைப்புச் சட்டத்தின் 21 வது சரத்தின் கீழ் வாழ்வதற்கான மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையின் ஒரு பகுதியாக இந்த உரிமையை உச்ச நீதிமன்றமானது அங்கீகரித்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதற்கான உரிமை

  • நால்சா எதிர் இந்திய ஒன்றியம் (2014), புட்டசாமி எதிர் இந்திய ஒன்றியம் (2017) மற்றும் நவ்தேஜ் சிங் ஜோஹர் எதிர் இந்திய ஒன்றியம் (2018) ஆகிய வழக்குகளில் பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை உச்ச நீதிமன்றமானது நிறுவியது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 19, 21 மற்றும் 25 ஆகிய சரத்துக்களின் அடிப்படையில் பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மையினருக்கு திருமணத்தைச் செய்து கொண்டு குடும்பத்தை நிறுவுவதற்கான உரிமையை நீட்டிக்க மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது.

சுயாதீனமாக முடிவெடுத்தல் மீதான உரிமை மீறல்கள்

  • எந்தவொரு நபருக்கும் திருமணத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்க அதிகாரம் வழங்குவதன் மூலம் இது அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 21வது சரத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள முடிவெடுக்கும் சுயாட்சியினை மீறச் செய்கின்றன
  • குடும்பச் சட்டத்தின் மீதான சீர்திருத்தம் குறித்த ஆலோசனைக் கட்டுரையை சட்ட ஆணையமானது வெளியிட்டதோடு, அதில் உள்ள விதிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 21 என்பதின் மூலம் பாதுகாக்கப்பட்ட தனிப்பட்டச் சுயாட்சிக்கு இது தடையாக இருப்பதை அங்கீகரித்துள்ளது.

மனச்சான்று வழி ஒழுகுதல் மற்றும் மத சுதந்திரம் மீதான உரிமை

  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25வது சரத்து ஆனது மனச்சான்று வழி ஒழுகுதல் மற்றும் மதச் சுதந்திரத்தை உறுதி செய்கிறது.
  • புட்டசாமி எதிர் இந்திய ஒன்றியம் (2017) என்ற வழக்கில் மத நம்பிக்கைகளை விட தனி நபரின் மனச்சான்று வழி ஒழுகுதல் என்ற சுதந்திரம் மேலானது என்று உச்ச நீதிமன்றமானது தீர்ப்பளித்ததால், திருமணத் துணையினைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமானது மனச்சான்று வழி ஒழுகுதல் சுதந்திரத்தின் ஒருங்கிணைந்த அங்கம் என்றும் மனுதாரர்கள் வாதிட்டனர்.
  • பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மையினருக்கு இடையிலான திருமணத்தை இந்து மதமானது தடை செய்யவில்லை.

​​​​​​​

சர்வதேச ஒப்பந்தங்கள்

  • மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு சர்வதேச அளவிலான ஒப்பந்தங்களில் இந்தியா ஒரு கட்சியினராக இணைந்துள்ளது.
  • 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் மனித உரிமைகளுக்கான உலகளாவியப் பிரகடனத்தை (UDHR) ஏற்பதாக இந்தியா வாக்களித்தது.
  • இது 1993 ஆம் ஆண்டின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது.
  • உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச மாநாடு (ICCPR) மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICESCR) ஆகியவற்றை 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று இந்தியா அங்கீகரித்துள்ளது.
  • சர்வதேச மனித உரிமைகள் சட்டமானது கடந்த மூன்று தசாப்தங்களாக, பாலின மற்றும் பாலினச் சிறுபான்மையினரின் சமத்துவம், தனியுரிமை மற்றும் சுயாட்சிக்கான உரிமைகள் மற்றும் பாலியல் நோக்குநிலை மற்றும் பாலின அடையாளத்தின் அடிப்படையிலான பாகுபாட்டிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு நிறுவப்பட்ட சட்டச் சொற்களுக்கான விளக்கத்தினை உருவாக்கியுள்ளது.

பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மை துணைவரின் குடியுரிமை

  • குடியுரிமைச் சட்டமானது இந்தியச் சட்டத்தின் கீழான திருமணத்தினைப் பற்றி ஆராய அதிகாரிகளுக்கு எவ்வித அதிகாரத்தையும் வழங்கவில்லை என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
  • எனவே, திருமணமானது வெளிநாட்டில் செல்லுபடியாகும் வகையில் பதிவு செய்யப் பட்டிருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த பாலியல் அல்லது பாலினச் சிறுபான்மையினரின் வாழ்க்கைத் துணைவரானவர் மற்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க உரிமை உண்டு.

சட்டமன்றக் கொள்கை

  • திருமணம், இரத்த அல்லது தத்தெடுப்பு உறவுகளுக்கு வரையறுக்கப்பட்ட பல்வேறு உரிமைகள், சலுகைகள், கடமைகள் மற்றும் நன்மைகளை மனுதாரர்கள் எடுத்துக் காட்டினர்.
  • சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத வாழ்க்கைத் துணைவர்கள், பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மை நபர்களின் குடும்பங்களை இந்த சட்ட விதிகளானது விலக்கம் செய்கின்றது.

​​​​​​​

சுகாதாரம்

  • ஒரு நோயாளி ஒரு தொடர்ச்சியாக செயல்படாத நிலையில் இருப்பதால் அவர்களின் விருப்பங்களைத் தெரிவிக்க முடியாது.
  • ஒரு வகையான மனத்தளர்ச்சியினால் ஏற்படும் மனநிலைப் பாதிப்பு அல்லது அது போன்ற நோயைக் கொண்டிருப்பது அல்லது மயக்க மருந்தின் கீழ் இருக்கும் ஒருவர் போது, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத வாழ்க்கைத் துணைவர்கள், பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் குடும்பங்களானது அவர்களுக்கான சுகாதார முடிவுகளை எடுக்க அனுமதிக்கப் படுவதில்லை.
  • இருவரும் உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த போதோ தன் துணைவரின் உறுப்பு தானம் தொடர்பான விவகாரத்தில் பாகுபாட்டினைச் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்படாத வாழ்க்கைத் துணைவர்கள், பாலின மற்றும் பாலினச் சிறுபான்மை நபர்களின் குடும்பங்களானது எதிர்கொள்கின்றது.
  • 1994 ஆம் ஆண்டு மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டத்தின் கீழ், உறுப்புகளை தானம் செய்வதற்கான அறிவிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒருவர், ஒரு திருமண, இரத்த அல்லது வளர்ப்பு உறவினராவது இருத்தல் வேண்டும்.
  • 1994 இன் மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டத்தின் கீழ், உறுப்புகளை தானம் செய்வதற்கான அறிவிப்புக்கு குறைந்தபட்சம் ஒரு திருமணம், இரத்தம் அல்லது வளர்ப்பு உறவினராவது இருக்க வேண்டும்.
  • பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மையினரின் துணைவர்கள், மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டத்தின் கீழ் செயல்படும் அங்கீகாரக் குழுவின் முன் அனுமதியினைப் பெற வேண்டும்.

​​​​​​​

நிதி

  • வாரிசு, பராமரிப்பு, சொத்துக்களின் கூட்டு உரிமை, வரிவிதிப்பு மற்றும் சலுகைகள் தொடர்பான உரிமைகளானது பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மை நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப் படவில்லை.
  • தனிப்பட்ட உரிமைகளிலிருந்துப் பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மை நபர்களின் குடும்ப உறுப்பினர்களை விலக்குவதால், பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மை தனிநபர்களுக்குத் தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் ஆயுள் காப்பீட்டுப் பரிந்துரைகள், கூட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் பாதுகாப்புப் பெட்டகம், பரஸ்பர நிதிகள் மற்றும் சேமிப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் அதிக தடைகளையும், அதிக ஆய்வுகளையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
  • 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின்படி, மொத்த வருவாயினைக் கணக்கிடும் போது, ​​வாழ்க்கைத் துணையின் சார்பாகச் செலுத்தப்படும் பணமானது இதில் சேர்க்கப்பட்டு கழிக்கப்படும்.
  • பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மை நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் அத்தகைய விலக்களிப்புகளைக் கோர இயலாது.
  • ராஜேஷ் எதிர் ராஜ்பீர் சிங் வழக்கின் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் காயம் மற்றும் இறப்புக்கான உரிமைக் கோரல்கள் உட்பட, உரிமைக் கோரல்களில் கருதப்படும் துணைவர் கூட்டமைப்பு அடிப்படையில் வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பானது திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
  • எனவே பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மையினரின் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப் படாத வாழ்க்கைத் துணைவர்களுக்கு அத்தகைய உரிமைக் கோரல்கள் மறுக்கப் படுகின்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்