(For English version to this please click here)
ஓர் அறிமுகம்
- தி.மு.க அரசால் நடத்தப்பட்ட2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030க்குள் மாநிலத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பினை எட்டும் பொருளாதாரமாக மாற்றும் திட்டங்களை வெளியிட்டார்.
- தமிழ்நாடு அரசு 2024ஆம் ஆண்டிற்கான உலக முதலீட்டாளர்கள் சந்திப்பின் அதிகாரப்பூர்வ சின்னத்தை வெளியிட்டது.
- இது தமிழ் எழுத்தான 'த' வைக் குறிக்கிறது மற்றும் முன்னேற்றம் மற்றும் செழிப்பைக் குறிக்கிறது.
- தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு, இம்மாநிலத்தின் வலுவான முதலீட்டுகளை முதன்மைப் படுத்தி அதனை ஊக்குவித்தது.
- மேலும் இது விதிவிலக்கான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் திறமையான பணியாளர்களை உலக முதலீட்டாளர்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.
- இந்நிகழ்வின் முக்கிய கருத்துருவான தலைமைத்துவம், நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கம் என்பது அதன் குறிக்கோள்களான பொருளாதார இலக்குகளை நோக்கி இம்மாநிலத்தை இயக்கும்.
பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்பு
- இந்நிகழ்வுவானது ஒன்பது கூட்டாண்மை நாடுகளின் ஒரு துடிப்பான செயல்பாட்டினைக் கண்கூடாக கண்டது.
- இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் அடங்கும்.
- சர்வதேசப் பங்குதாரர் அமைப்புகள் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைபே பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையம் (Taipei Economic & Cultural Centre) தமிழ்நாடு அரசாங்கத்துடன் இணைந்து, இந்நிகழ்வினை உலகளவில் எடுத்துச் சென்றது.
முதலீட்டு ஒப்பந்தங்கள்
- இந்த நிகழ்வின் போது மொத்தம் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
- இது இதுவரையில் இல்லாத அளவில் சுமார் ரூ.6,64,180 கோடிகள் அளவிற்கு முதலீடுகள் கொண்ட ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
- இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் நேரடி வேலைவாய்ப்பின் மூலம் 14,54,712 தனி நபர்களுக்கும், மொத்த வேலை வாய்ப்பின் மூலம் 26,90,657 நபர்களுக்கும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட திட்டமிடப் பட்டுள்ளது.
- மேம்பட்ட மின்னணுவியல், பசுமை ஆற்றல், வாகன உற்பத்தி, விண்வெளி மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
கொள்கை முயற்சிகள் மற்றும் முன்னெடுப்புகள்:
- இந்நிகழ்வும் தமிழ்நாடு குறைகடத்திகள் மற்றும் மேம்படுத்தப் பட்ட மின்னணுக் கொள்கை 2024 மற்றும் பொது-தனியார் கூட்டமைப்புக் கொள்கை ஆகியனவற்றின் அறிமுகம் போன்றவற்றை உள்ளடக்கியது.
- இம்மாநிலத்தின் பொருளாதாரத் திட்டத்தைக் மேம்படுத்த, "2030-க்குள் $1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கான ஒரு வரைபடம்" என்பது முதலமைச்சரால் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் சார்ந்த நிலப்பரப்பு:
- இந்தியாவில் தமிழ்நாடு பொருளாதார அடிப்படையில் இரண்டாவது பெரிய மாநிலமாக உள்ளதோடு ஒரு முக்கியத் தொழில்துறை மையமாக விளங்கி, பல்வேறு துறைகளில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகளை தமிழ்நாடு வழங்குகிறது.
- தமிழ்நாட்டின் வலுவான தொழில்துறை அடித்தளமானது, ஊக்கமளிக்கும் நிர்வாகம், நவீன உள்கட்டமைப்பு, ஏராளமான வளங்கள் மற்றும் திறமையானப் பணியாளர்களால் உலக முதலீட்டாளர்களை நன்கு ஈர்க்கிறது.
- தொடர்ச்சியான முன்னேற்றத்துடன், 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது என்ற வகையில் இது அனைவருக்கும் நிலையான வளர்ச்சி மற்றும் வளத்தை உறுதி செய்கிறது.
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நிலையான உள்கட்டமைப்பு மேம்பாடு
- டாடா பவர் திருநெல்வேலியில் ₹70,800 கோடி முதலீட்டில் சூரிய சக்தி ஆலையை விரிவுபடுத்தி, 3,800 வேலைகளை உருவாக்குகிறது.
- அதானி குழுமம், தரவு மையம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகர எரிவாயு விநியோகம் மற்றும் இன்னும் பலவற்றிற்காக ₹42,768 கோடிகள் முதலீடு செய்து, 10,000 பேருக்கும் மேல் பணியமர்த்தவுள்ளது.
- செம்கார்ப் நிறுவனம் தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் ஆலையை ₹36,238 கோடி முதலீட்டில் அமைத்து, 1,500 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- லீப் கிரீன் எனர்ஜி தூத்துக்குடியில் ₹17,400 கோடி முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் மின் சேமிப்பு ஆலையை அமைத்து, 3,300 வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளது.
- ஜட் விண்ட்பவர் நிறுவனம் கோவையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை ₹750 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தி, 200 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- ஷல் மார்க்கெட்ஸ் இந்தியா நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டம் மற்றும் உலகளாவியக் கொள்திறன் மையத்தில் ₹1,070 கோடி முதலீடு செய்து, 50,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கவுள்ளது.
தொழில்துறை விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம்
- சென்னை பெட்ரோலியக் கழகம் (CPCL) நாகப்பட்டினத்தில் உள்ள பெட்ரோலிய வேதிப் பொருட்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில் ₹17,000 கோடி முதலீடு செய்து 2,400 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- எல்&டி நிறுவனம் சென்னையில் புத்தாக வளாகம் அமைக்க ₹3,500 கோடி முதலீட்டில், 40,000 பேருக்கு மேல் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- செயிண்ட் கோபைன் நிறுவனம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் புதிய மையங்களை நிறுவவும், ஏற்கனவே உள்ளவற்றை விரிவுபடுத்தவும் ₹3,400 கோடி முதலீட்டில், 1,100 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- ராயல் என்ஃபீல்டு ₹3,000 கோடி முதலீடு செய்து, 2,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- சால்காம்ப் நிறுவனம் ₹2,271 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தியை விரிவு செய்து, 15,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குகிறது.
- ஸ்டெல்லண்டிஸ் குழுமம் திருவள்ளூரில் கார் தயாரிப்பில் ₹2,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.
- ராமகிருஷ்ணா டிட்டகர் ரயில் வீல்ஸ் நிறுவனம் திருவள்ளூரில் ரயில் சக்கரங்களுக்கான உற்பத்தி மையத்தை அமைக்க 1,850 கோடி முதலீட்டில், 1,400 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- மஹிந்திரா நிறுவனம் தொழில் பூங்காக்கள் மற்றும் ஓய்வு விடுதிகளை அமைக்க ₹1,800 கோடி முதலீட்டில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளது.
- ஃபெஸ்டோ இந்தியா நிறுவனம் கிருஷ்ணகிரியில் ₹520 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையத்தை நிறுவி, 2,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் ராமநாதபுரத்தில் ₹1,000 கோடி முதலீட்டில் ரசாயன வளாகம் அமைத்து, 500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளது.
- ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் விருதுநகர் மற்றும் சேலத்தில் ₹999 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையங்களை நவீனமயமாக்கி, 150 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- ENES ராமராஜ் 13 மாவட்டங்களில் ₹1,000 கோடி முதலீட்டில் மையங்களை நிறுவி, 13,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும் புத்தாக்க மையங்களை விரிவுபடுத்துதல்
- ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை விரிவுபடுத்த ₹100 கோடி முதலீட்டில், 1,500 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- பாஹ்னுக் இந்தியா நிறுவனம் காஞ்சிபுரத்தில் ₹55 கோடி முதலீட்டில் ரோபோட்டிக்ஸ் சேவை மையத்தை நிறுவ உள்ளது.
- யுபிஎஸ் இந்தியா தொழில்நுட்ப மையம் சென்னையில் உள்ள உலகளாவிய திறன் மையத்தில் ₹44 கோடி முதலீடு செய்து 1,999 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- மைக்ரோசாப்ட் DC நிறுவனம் சென்னையில் ₹2,740 கோடி முதலீட்டில் தரவு மையத்தை அமைக்க உள்ளது.
- சிபி டெக்னாலஜிஸ் நிறுவனம் ₹2,500 கோடி முதலீட்டில் தரவு மையத்தை அமைத்து, 300 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
காலணி மற்றும் ஆடை உற்பத்தி விரிவாக்கம்
- லாங் யின் நிறுவனத்தின் தோல் அல்லாத பாதணிகளைத் தயாரிக்க ₹1,500 கோடி முதலீட்டில், 22,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- டிகேஜி டேக்வாங் நிறுவனம் தோல் அல்லாத காலணிகளைத் தயாரிக்க ₹1,250 கோடி முதலீட்டில், 9,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- ஷாஹி ஏற்றுமதி நிறுவனம் ஆடை மையங்களை நிறுவி ₹1,000 கோடி முதலீட்டில், 22,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- ஹாங் ஃபூ தொழில்நுட்ப குழுமம் ராணிப்பேட்டையில் தோல் அல்லாத பாதணிகளை உற்பத்தி செய்ய ₹500 கோடி முதலீட்டில், 22,000க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்குகிறது.
சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருந்தகங்கள்
- காவேரி மருத்துவமனை தமிழகத்தில் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்த ₹1,200 கோடி முதலீட்டில், 7,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கிறது.
- கேப்லின் குழுமம் பல்வேறு இடங்களில் மருந்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவி ₹700 கோடி முதலீட்டில், 1,500 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் வளர்ச்சி
- போயிங் இந்தியா நிறுவனம் சென்னையில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ₹309 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தி, 500 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
- ஜாம் இன்ப்ரா (Jindal Defence) வான்வெளி உதிரிபாகங்கள் உற்பத்தி மையம் அமைக்க ₹1,000 கோடி முதலீட்டில், 800 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
வாகன உற்பத்தி மற்றும் விவசாய இயந்திரங்கள்
- ஆனந்த் குழுமம் மூன்று மாவட்டங்களில் வாகன மற்றும் மின்சார வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தியை விரிவுபடுத்தி ₹987 கோடி முதலீட்டில் 1,300க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்குகிறது.
- ஹிந்துஜா குழுமம் பல்வேறு இடங்களில் வணிகத்தை விரிவுபடுத்தி ₹1,200 கோடி முதலீட்டில், 500 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- TAFE நிறுவனம் டிராக்டர் எண்ணிகையை விரிவுபடுத்த ₹500 கோடி முதலீட்டில், 1,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
-------------------------------------