TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் LGBT சமூகத்தினரின் உரிமைகள் – பகுதி 1

November 26 , 2023 172 days 436 0

(For English version to this please click here)

தமிழ்நாட்டில் LGBT சமூகத்தின் உரிமைகள்

  • நேர்பாலீர்ப்பாளர், ஓரினச்சேர்க்கையாளர், இருபால் ஈர்ப்பாளர் மற்றும் திருநங்கை (LGBT) போன்றோர் தொடர்பான உரிமைகள் அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் மிகவும் முற்போக்கானவை.
  • 2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் திருநங்கைகள் நலக் கொள்கையை அறிமுகப் படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • இதில் மாற்றுத்திறனாளிகள் அரசு மருத்துவமனைகளில் இலவசப் பாலின உறுதி அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு சலுகைகள் மற்றும் உரிமைகளை அணுகலாம்.
  • ஊடு பாலினக் குழந்தைகளுக்குத் செய்யப்படும் கட்டாயமா பாலினத்தைத் தேர்ந்தெடுக்கும் அறுவை சிகிச்சைகளைத் தடை செய்த முதல் மாநிலமும் இதுவாகும்.
  • LGBTQIA சமூகத்தையும் அதன் உறுப்பினர்களையும் துன்புறுத்துவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதன் மாநிலக் காவல்துறைக்கான வழிகாட்டுதல்களில் ஒரு திருத்தத்தையும் கொண்டு வந்த முதல் மாநிலம் இதுகும்.
  • மாற்று அறுவை சிகிச்சையைத் தடை செய்த முதல் மாநிலமாகவும், பள்ளிப் பாடத் திட்டங்களில் LGBTQIA சிக்கல்களை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாகவும் இம்மாநிலம் உருவானது.

  • நவ்தேஜ் சிங் ஜோஹர் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு முதல் ஓரினச் சேர்க்கைச் செயல்பாடானது சட்டப்பூர்வமாக உள்ளது.
  • LGBT சமூகத்தினரைப் பொறுத்தவரை, குறிப்பாக திருநங்கைகளுக்கு மிகவும் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது.
  • ஆயினும் கூட, பாகுபாடு, ஏற்பாடு செய்யப்பட்ட எதிர் பாலினத் திருமணங்கள், கொடுமைப் படுத்துதல், தற்கொலைகள் மற்றும் குடும்ப நிராகரிப்புகள் பற்றிய அறிக்கைகள் மிகவும் பொதுவானவை.
  • 2015 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, தமிழ்நாட்டில் சுமார் 16,380 பேர் தங்களை LGBT சமூகத்தினர் என அடையாளப் படுத்தியுள்ளனர்.
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று, தமிழ்நாட்டின் உயர்ந்த நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்றமானது, 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் கீழ் "மணமகள்" என்ற வார்த்தையில் திருநங்கைகளும் அடங்குவர் என்று தீர்ப்பளித்தது.
  • குறிப்பாக, ஆணுக்கும் திருநங்கைக்கும் இடையேயான திருமணத்தைப் பதிவு செய்ய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநங்கைகளின் உரிமைகள்

  • தமிழ்நாட்டில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் திருனர், குறிப்பாக மூன்றாம் பாலினப் பெண்களானவர் திருநங்கைகள் மற்றும் மூன்றாம் பாலின ஆண்கள் திரு நம்பிகள் என்று அழைக்கப் படுகின்றனர்.

  • அதனை முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
  • தமிழில் அரவாணி (அரவாணி) என்ற சொல் 1990 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே பரவலாகப் பேசப்பட்டது.
  • அரவாணி என்ற சொல் ஹிஜ்ரா என்ற சொல்லிற்கான ஒரு மாற்றாகும்.
  • தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கைகள் பெரும்பாலும் வேலைகளிலும் அன்றாட வாழ்விலும் பாகுபாடு காட்டப்பட்டு, பிச்சை எடுப்பதற்கும் விபச்சாரத்துக்கும் தள்ளப் படுகிறார்கள்.
  • 1994 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து திருநங்கைகளுக்கும் வாக்களிக்கும் உரிமையினை தலைமைத் தேர்தல் ஆணையர் T.N. சேஷன் வழங்கினார்.
  • 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், தமிழகத்தில் உள்ள திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டையினை வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் G.R. சுவாமிநாதன் ஆஜரானார்.

  • இந்த வழக்கில் பதிலளித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) அரசானது மாநிலத்தில் மொத்தமாக 11 திருநங்கைகள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைப் பதிவு செய்ய முன்வந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.
  • இந்த சமர்ப்பினைப் பதிவு செய்த நீதிமன்றமானது, திருநங்கைகளை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான உரிமையினை ஊடகங்கள் மூலம் விளம்பரப் படுத்துமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
  • 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், திருநங்கைகளின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளுடன் ஒரு அரசு ஆணையும் நிறைவேற்றப் பட்டது.
  • திருநங்கைகளை ஏற்க மறுப்பதிலிருந்துக் குடும்பங்களைத் தடுப்பதற்கும், அத்தகைய குழந்தைகளைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அனுமதிக்கப் படுவதை உறுதி செய்வதற்கும் ஒரு வழிமுறையான ஆலோசனைக்குரிய ஆணையினை ஆதரிக்கிறது.
  • அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று திருநங்கைகளுக்கான நல வாரியத்தை அரசானது அமைத்தது.

  • இந்த முயற்சி இந்தியாவிலேயே முதன்முறையாக முக்கியமானதாகப் பேசப் பட்டது.
  • தமிழகத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதியானது திருநங்கைகள் நல தினமாக அனுசரிக்கப் படுகிறது
  • சமூக நலத்துறை அமைச்சர் இந்நல வாரியத்தின் தலைவராக பணியாற்றுகிறார்.
  • மாநில அரசானது திருநங்கைகளுக்கென தனியாக உணவுக்கான குடும்ப அட்டைகளையும், சிறப்பு அடையாள அட்டைகளையும் வழங்கத் தொடங்கி ள்ளது.
  • 2008 ஆம் ஆண்டில் திருநங்கைகள் நலக் கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • இக்கொள்கையின்படி, திருநங்கைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசப் பாலின மறுசீரமைப்புக்கான அறுவை சிகிச்சை, இலவச வீடுகள், பல்வேறு குடியுரிமை ஆவணங்கள், உயர் படிப்புக்கான முழு உதவித்தொகையுடன் அரசு கல்லூரிகளில் சேர்க்கை மற்றும் வருமானத்தை உருவாக்கும் திட்டங்களை (IGP) தொடங்கலாம்.
  • திருநங்கைகளின் கல்வியை மேம்படுத்துவதற்கான கூடுதல் முயற்சியாக, அரசுக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு "மூன்றாம் பாலினம்" என்ற விருப்பத்தை உருவாக்க தமிழக அரசின் அதிகாரிகள் 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில் உத்தரவு பிறப்பித்தனர்.

  • 2017 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமானது திருநங்கைகளுக்கான இலவசக் கல்வியினை வழங்குவதைத் தொடங்கியது.
  • 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று மதுரையைச் சேர்ந்த சிருஷ்டி எனும் மாற்றுப் பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவுள்ள மக்களுக்கான மாணவர் அமைப்பும், மதுரையைச் சேர்ந்த திருநங்கைகள் மற்றும் பாலின ஆர்வலர்களான S.ஸ்வப்னா, கோபி சங்கர் மதுரை ஆகியோர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம், மேல்நிலைப் பள்ளிச் சான்றிதழ் மற்றும் வங்கித் தேர்வுகளில் மாற்றுப் பாலினத்தவர் கலந்து கொள்ள இடஒதுக்கீடு கோரியும் போராட்டம் நடத்தினர்.
  • தற்செயலாக, 2013 ஆம் ஆண்டு ஸ்வப்னா என்பவர் TNPSC குரூப் II தேர்வினை ஒரு பெண் வேட்பாளராக எழுத அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிகரமாக வழக்குத் தொடர்ந்தார்.
  • TNPSC குரூப் IV தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் திருநங்கை ஸ்வப்னா ஆவார்.
  • 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மற்ற 21 திருநங்கைகளுடன், K. பிரித்திகா யாஷினி சென்னை மாநகர காவல் ஆணையர் ஸ்மித் சரணிடம் இருந்து பணி நியமன ஆணைகளைப் பெற்றார்.
  • 2015 ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, யாஷினி "அரசு வேலையைப் பெற தகுதியுடையவர்" என்பதால், அவரைக் காவல்துறை துணை ஆய்வாளராக நியமிக்கக் கோரி தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியத்திற்கு (TNUSRB) வழிகாட்டுதல்கள் வழங்கப் பட்டன.

  • "ஆண்" மற்றும் "பெண்" என்ற வழக்கமான வகையைத் தவிர்த்து, திருநங்கைகளை "மூன்றாவது பிரிவாக" சேர்க்குமாறு TNUSRB அமைப்பினை இத்தீர்ப்பானது மேலும் அறிவுறுத்தியது.
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி G.R. சுவாமிநாதன் அவர்கள் 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின் கீழ் திருநங்கைகளின் திருமண உரிமையை நிலைநாட்டி ஒரு முக்கியத் தீர்ப்பினை வழங்கினார்.
  • 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், திருநங்கைகளுக்கான தேசிய மன்றத்தின் தென் மண்டலப் பிரதிநிதியாக கோபி சங்கர் மதுரை என்பவரைச் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது நியமித்தது.

ஊடுபாலினத்தினருக்கான உரிமைகள்

  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று, மதராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வானது, ஊடுபாலினக் குழந்தைகளுக்கு அவர்கள் பாலினத்தைத் தேர்ந்தெடுக்கும் அறுவை சிகிச்சைக்குத் தடையினை விதித்துத் தீர்ப்பளித்தது.
  • கோபி சங்கர் மதுரையின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஊடுபாலினக் குழந்தைகள் மற்றும் அக்குழந்தைகளுக்குச் செய்யப்படும் கட்டாய மருத்துவத் தலையீடுகளின் பரவலான நடைமுறையை நீதிமன்றம் கவனத்தில் எடுத்தது.
  • சங்கரின் இந்தப் பணியானது நீதிமன்றத்திற்கு மிகவும் பணிவான மற்றும் அறிவொளி தரும் அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்ட நீதிமன்றமானது சங்கருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தது.
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், நீதிமன்றத் தீர்ப்புக்களுக்கு இணங்கச் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் ஊடுபாலினக் குழந்தைகளுக்கு மருத்துவத் தலையீடுகளைத் தடை செய்யும் வரைவு அறிக்கையானது தயார் செய்யப்படும் என்று அப்போதையச் சுகாதாரத்துறை அமைச்சர் C.விஜயபாஸ்கர் அவர்கள் அறிவித்தார்.

  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று, ஊடுபாலினக் குழந்தைகளுக்கு கட்டாய மருத்துவத் தலையீடுகளை தடை செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசானது வெளியிட்டது.
  • சென்னை உயர்நீதிமன்றப் பரிந்துரைகளின் படி, மூன்றாம் பாலினத்தவர்களை எப்படி அணுக வேண்டும் என தமிழக அரசானது ஒரு சொற்களஞ்சியத்தையும் வெளியிட்டுள்ளது.

LGBTQIA என்பவர்கள் யார்?

  • L, G மற்றும் B ஆகியவை பாலியல் நோக்குநிலையைக் குறிக்கின்றன, அதாவது ஒருவரைக் கவர்ந்தவர்கள் பெரும்பாலும் நேர்பால் ஈர்ப்பாளர் அல்லது ஓரினச் சேர்க்கையாளரைக் குறிக்கும்.
  • இருபால் ஈர்ப்பாளர் என்பவர் ஆண் மற்றும் பெண் இருபாலரின் மீதும் ஒரு வகையான ஈர்ப்பினைக் கொண்டவர்கள்.
  • திருநங்கை என்பது பிறக்கும் போதே பாலின அடையாளம் காணப்பட்டுப் பெயரிடப் பட்டவர்களைத் தவிர வேறு பாலினமாக அடையாளம் காணப் பட்டவர்களைக் குறிக்கிறது.
  • Q என்பது கேள்விகள் மற்றும் வினோதமான அல்லது பால் புதுமையினர் என்ற பாலினத்தைக் குறிக்கிறது.

  • தங்கள் அடையாளத்தை ஆராய்கிறார்கள் மற்றும் தங்களை அடையாளத்தினை வெளியிட விரும்பாமல் இருக்கலாம் கேள்வி கேட்பது என்பது அவர்களின் ஒரு அடையாளம் ஆகும்
  • வினோதமான பாலினத்தார் அல்லது பால் புதுமையினர் என்ற வார்த்தையானது அடிக்கடி தன்னை LGBTQIA சமூகத்தின் உறுப்பினராக அடையாளப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது.
  • I என்பது பெண் அல்லது ஆணின் பொதுவான வரையறைகளுக்குப் பொருந்தாத ஒரு இனப்பெருக்க அல்லது பாலியல் உடற்கூறுடன் பிறக்கும் ஒரு நபரின் ஊடு பாலினத்தைப் பற்றி பேசுகிறது.
  • 'A' என்பது பாலியல் உணர்வுகள் இல்லாத ஓரினச் சேர்க்கையைக் குறிக்கிறது.
  • ‘++’ திறந்த மற்றும் உள்ளடக்கிய தன்மையினைப் பரிந்துரைக்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்