TNPSC Thervupettagam

முக்கியத் தினங்கள் - மே

October 23 , 2018 2034 days 10165 0
மே - 1
சர்வதேச தொழிலாளர் தினம்
  • 2018-ன் கருத்துருவானது, “சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தொழிலாளர்களை ஒன்றிணைப்பது” என்பதாகும்.
  • இது ஒரு வடதுருவ இளவேனிற்கால திருவிழாவாகும். மேலும் இது பல்வேறு கலாச்சாரங்களில் பழமையான இளவேனிற்கால விடுமுறையாகும்.
  • 1886ம் ஆண்டில் சிகாகோவில் ஹேமார்க்கெட் விவகாரத்தை கொண்டாடுவதற்கான இரண்டாவது சர்வதேச மாநாட்டில் சமதர்மவாதிகள் மற்றும் பொதுவுடைமையாளர்களால் மே தினமானது சர்வதேச தொழிலாளர்கள் தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • சிகாகோவில் தொழிலாளர்களின் எட்டுமணி நேர வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக ஹேமார்க்கெட் விவகாரம் அமைதிப் பேரணியாகத் தொடங்கியது (ஹேமார்க்கெட் சம்பவம் அல்லது ஹேமார்க்கெட் கலவரம் என்றும் அழைக்கப்படுகிறது).

 

உலக ஆஸ்துமா தினம் - மே 1, 2018 (மே மாதம் முதலாவது செவ்வாய்க் கிழமை)
  • இந்த வருடாந்திர நிகழ்ச்சியானது ஆஸ்துமாவிற்கான சர்வதேச முன்முயற்சியினால் (GINA - Global Initiative for Asthma) நடைபெற்றது.
  • உலக ஆஸ்துமா தினத்தின் தொடக்க விழாவானது 1998-ல் நடைபெற்றது.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது, “மிக முன்பாகவும் மிக பின்பாகவும் இல்லாமல் : காற்று வழி பரவும் நோய்கள் விழிப்புணர்வுக்கான சரியான நேரம்” என்பதாகும்.

 

மஹாராஷ்டிரா தினம்
  • 1960 ஆம் ஆண்டு மே 1 அன்று பம்பாய் மாகாணத்திலிருந்து பிரிந்து மஹாராஷ்டிரா மாநிலம் உருவானதைக் கொண்டாடும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று இந்தியப் பாராளுமன்றத்தினால் பம்பாய் மறுசீரமைப்புச் சட்டம், 1960-ன் படி, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
  • இச்சட்டம் 1960 ஆம் ஆண்டு மே 1 அன்று நடைமுறைக்கு வந்தது.

 

 மே - 2

சர்வதேச துனா தினம்
  • ஐ.நா-வானது துனா மீன்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நீடித்த மீன்பிடி நடைமுறைகளை ஊக்கப்படுத்தவும் சர்வதேச துனா தினமாக மே 2-ஐ ஏற்படுத்தியுள்ளது.
  • இத்தினம் முதன்முறையாக 2017 ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.

 

மே - 3
உலகப் பத்திரிக்கை சுதந்திர தினம்
  • 1993 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் (UNESCO - United Nations Educational, Scientific and Cultural Organisation) உலகப் பத்திரிக்கை தினம் கொண்டாடப்படுகிறது.
  • இதன் நோக்கம் 1948 ஆம் ஆண்டு உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் 19வது ஷரத்தில் கூறப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மதித்து நடப்பது அரசாங்கத்தின் பணி என்பதை நினைவுபடுத்துவதாகும்.
  • 1991 ஆம் ஆண்டில் விண்ட்கூக்கில் ஆப்பிரிக்கப் பத்திரிக்கை நிபுணர்களால் வெளியிடப்பட்ட பத்திரிக்கை சுதந்திர கொள்கைகளின் அறிக்கையான விண்ட்கூக் பிரகடனத்தின் நினைவை இத்தினம் குறிக்கிறது.
  • யுனெஸ்கோவானது 1997 ஆம் ஆண்டு முதல் தனிநபர், அமைப்பு அல்லது நிறுவனத்திற்கு யுனெஸ்கோ கயிலர்மோ கேனோ சர்வதேசப் பத்திரிக்கை சுதந்திரப் பரிசை வழங்குவதன் மூலம் பத்திரிக்கை சுதந்திர தினத்தை அனுசரிக்கிறது.
  • 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ல் போகோடாவில் தனது நாளிதழான EI எஸ்பெக்டேடர் அலுவலகத்தின் முன்பு படுகொலை செய்யப்பட்ட கொலம்பியப் பத்திரிக்கையாளரான கயிலர்மோ கேனோ இசாசா என்பவரை கௌரவிப்பதற்காக இவ்விருதுக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • 2018ம் ஆண்டில் யுனெஸ்கோ மாநாடு அக்ராவில் (கானா) நடைபெற்றது.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது, “அதிகாரத்தைத் தொடர்ந்து கண்காணித்தல் : ஊடகம், நீதி மற்றும் சட்டம்” என்பதாகும்.
சர்வதேச ஆற்றல் தினம்
  • உலகம் முழுவதும் பன்னாட்டு ஆற்றல் முகமையால் (International Energy Agency - IEA) இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
மே - 4
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்
  • ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட புதர்த் தீயினால் 5 தீயணைப்பு வீரர்கள் இறந்ததன் காரணமாக 1999 ஆம் ஆண்டு ஜனவரி 4 அன்று உலகம் முழுவதும் இ-மெயிலில் அனுப்பப்பட்ட பரிந்துரைக்குப் பின்பு இத்தினம் நிறுவப்பட்டது.
மே - 5
ஆப்பிரிக்க உலக பாரம்பரிய தினம்
  • ஆப்பிரிக்காவின் கலாச்சாரம் மற்றும் இயற்கைப் பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.
  • இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 5 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டு முதன்முறையாக யுனெஸ்கோ இத்தினத்தை கொண்டாடியது.
  • மே 5 அன்று ஆப்பிரிக்க உலக பாரம்பரிய தினமாக அனுசரிக்கப்படுவதை 38வது யுனெஸ்கோ பொதுக் கருத்தரங்கினால் பறைசாற்றப்பட்டது.
சர்வதேச பேறுகால உதவியாளர் தினம்
  • இத்தினம் முதன்முறையாக 1991 ஆம் ஆண்டு மே 5 அன்று கொண்டாடப்பட்டது.
  • 1987 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற பேறுகால உதவியாளர்களின் சர்வதேச கூட்டமைப்புக் கருத்தரங்கில் பேறுகால உதவியாளர்களை கௌரவிப்பதற்காகவும் அங்கீகரிப்பதற்காகவும் ஒரு தினத்தை அனுசரிக்க கருத்து தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச திறந்தவெளி தோட்ட தினம்
  • இந்த வருடாந்திர சர்வதேச நிகழ்ச்சியானது தோட்டம் உள்ளோர் மற்றும் தோட்டம் இல்லாதோர்களால் மே மாதத்தின் முதல் சனிக் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இது சுதந்திர அமைப்புக் கூட்டணியால் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • தொடக்க விழா : 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 10, சனிக்கிழமை.
  • நிறுவனர் : ஜெக்கோப் கேப்ரெயில் மற்றும் மார்க ஸ்டோரே.
மே - 6
சர்வதேச உணவுக் கட்டுப்பாடற்ற தினம்
  • இது கொழுப்பை ஏற்றுக் கொள்ளும் உடலின் தன்மை மற்றும் உடல் வடிவத்தின் பன்முகத் தன்மை உள்ளிட்ட உடல் ஏற்றுக்கொள்ளும் தன்மையைக் கொண்டாடும் வருடாந்திர நிகழ்ச்சியாகும்.
  • இதன் குறியீடு வெளுரிய நீல ரிப்பன் ஆகும்.
  • முதலாவது சர்வதேச உணவுக் கட்டுப்பாடற்ற தினம் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய இராஜ்ஜியத்தில் கொண்டாடப்பட்டது.
உலக சிரிப்பு தினம் - மே மாதம் முதலாவது ஞாயிறு முதல் மே 6 ஆம் தேதி வரை
  • இதன் முதலாவது கொண்டாட்டமானது 1998 ஆம் ஆண்டு மே 10 அன்று இந்தியாவின் மும்பையில் நடைபெற்றது. இது உலகம் தழுவிய சிரிப்பு யோகாசன இயக்கத்தின் நிறுவனரான டாக்டர் மதன் கட்டாரியா என்பவரால் ஒருங்கிணைக்கப்பட்டது.
மே - 7
உலக தடகள விளையாட்டு தினம்
  • உலக தடகள விளையாட்டு தினம் முதன்முறையாக 1996 ஆம் ஆண்டில் உலகளாவிய தடகள விளையாட்டுக் கூட்டமைப்பான சர்வதேச தடகள விளையாட்டுக் கூட்டமைப்பிற்கான மன்றத்தின் (IAAF - International Association of Athletics Federation) தலைவரான பிரைமோ நெபியோலோ (இத்தாலி) என்பவரால் தொடங்கப்பட்டது.
மே - 8
உலக செஞ்சிலுவைச் சங்க தினம்
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது, “உலகம் முழுவதிலுமிருந்து ஏற்படும் நினைவில் கொள்ளத்தக்க புன்னகைகள்” என்பதாகும்.
  • செஞ்சிலுவைச் சங்க நிறுவனரின் பிறந்த தினத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் உலக செஞ்சிலுவைச் சங்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கான சர்வதேச குழு (ICRC - International Committee of the Red Cross) ஆகியவற்றை நிறுவியவர் ஹென்றி டுனன்ட் ஆவார். இவர் 1828 ஆம் ஆண்டு ஜெனீவாவில் பிறந்தார்.
  • இவர் மிகவும் புகழ்பெற்ற மனிதர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முதலாவது மனிதர் ஆவார்.
ஐக்கிய நாடுகள் அனுசரிப்பு தினம்
  • இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்தல் மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கான தருணம்.
  • இதற்கான தினத்தை மே மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதியாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அறிவித்துள்ளது.
  • ஐ.நா. பொதுச் சபையானது 2004 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த கூட்டத்தில், இரண்டாம் உலகப் போர் முடிவுற்று 60-வது ஆண்டு நினைவாக 2005 ஆம் ஆண்டைக் கொண்டாட முடிவு செய்தது.
மே - 9
ரவீந்திர ஜெயந்தி
  • மே மாதத் தொடக்கத்தில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. வங்காள நாட்காட்டியில் 1268 ஆம் ஆண்டு (கி.பி 1861) தாகூர் பிறந்ததற்குப் பிறகிலிருந்து பொய்சாக் (வங்காள) மாதத்தின் 25 வது தினம் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • தற்பொழுது பொய்சாக்கின் 25வது தினம் கிரிகோரியன் நாட்காட்டியில் மே 8 அல்லது மே 9 உடன் ஒன்றிப் பொருந்துகிறது.
  • ஆங்கில நாட்காட்டியின்படி இரவீந்திரநாத் தாகூர் 1861 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவரது பெற்றோர் இரவீந்திரநாத் தாகூர் மற்றும் சாரதா தேவி ஆவார்.
  • கொல்கத்தாவில் தாகூர் ஜெயந்தி ‘புன்ச்சிஷி பொய்சாக்’ என்று வெகுவாக அறியப்படுகிறது.
ஐரோப்பிய தினம்
  • ஐரோப்பிய தினம் என்பது இரண்டு நாட்கள் கடைபிடிக்கப்படும் வருடாந்திர நிகழ்ச்சியாகும்.
  • இது மே 5 அன்று ஐரோப்பிய ஆணையத்தாலும் மே 9 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தாலும் கடைபிடிக்கப்படுகிறது.
  • ஐரோப்பா தோன்றியதிலிருந்து ஐரோப்பாவிற்குள் அமைதி மற்றும் வளமை ஏற்பட்டுள்ளதை இத்தினம் அங்கீகரிக்கிறது.
  • ஐரோப்பிய தினம் முதன்முறையாக 1964 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டு உக்ரைனால் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.
  • ஐரோப்பிய ஒன்றியம் பின்னர் 1950 ஆம் ஆண்டு சுமேன் பிரகடனத்தின் நினைவாக, அதன் சொந்த ஐரோப்பியத் தினத்தை கொண்டாடத் தொடங்கியது. இத்தினம் பலரால் “சுமேன் தினம்” என்றும் வெகுவாக அறியப்படுகிறது.
  • இவ்விரு தினங்களும் “ஐரோப்பியக் கொடியின்” காட்சிப்படுத்துதலுடன் பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது.
மே - 11
தேசியத் தொழில்நுட்ப தினம் (இந்தியா)
  • 1998 ஆம் ஆண்டு மே 11 அன்று, பொக்ரான் அணுக்கரு சோதனையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் இந்தியா பெரிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
  • மேலும் இதே நாளில் பெங்களூருவில் முதன்முறையாக உள்நாட்டுத் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட விமானமான ஹன்சா-3 சோதித்துப் பார்க்கப்பட்டது. விமானப் பயிற்சிக்கும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்ட இரண்டு இருக்கை கொண்ட முதலாவது விமானம் இதுவாகும்.
  • மேலும் இதே நாளில் இந்தியா திரிசூல் ஏவுகணை சோதனை முயற்சியையும் வெற்றிகரமாக நிகழ்த்தியது. திரிசூல் ஏவுகணையானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் ஒருங்கிணைந்த வழிகாட்டு ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது, “உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்கல் : பேச்சுவார்த்தையிலிருந்து வணிகத் திட்டப் பயணம்” என்பதாகும்.
மே - 12
சர்வதேச செவிலியர் தினம்
  • நவீன செவிலியத்தை நிறுவியவரான ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1965 ஆம் ஆண்டு முதல் சர்வதேச செவிலிய மன்றம் (International Council of Nurses) இத்தினத்தைக் கொண்டாடுகிறது.
  • கருத்துரு : “செவிலியர்கள் : தலைமைக்கான குரல் - சுகாதாரம் என்பது மனித உரிமை” என்பதாகும்.
சர்வதேச வலசைபோகும் பறவைகள் தினம் - 2018 ஆம் ஆண்டு மே 12 (மே மாதத்தின் 2வது சனிக்கிழமை)
  • சர்வதேச வலசைபோகும் பறவைகள் தினமானது 2006 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க-யுரேசிய வலசைபோகும் நீரில் வாழும் பறவைகளின் பாதுகாப்பு மீதான (AEWA- African-Eurasian Migratory Waterbird Agreement) ஒப்பந்தத்தின் தலைமைச் செயலகத்தினால் ஏற்படுத்தப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டு முதல், புதிய இணைப்புப் பிரச்சாரமானது “சர்வதேச வலசைபோகும் பறவைகள் தினம்” என்ற ஒற்றைப் பெயரை ஏற்றுக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் மே ஆகிய மாதங்களின் 2வது சனிகிழமை அன்று இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  • 2018 ஆம் ஆண்டு சர்வதேச வலசைபோகும் பறவைகள் தினத்திற்கு ஒரு புதிய தொடக்கத்தை அளித்துள்ளது.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது, “பறவைகள் பாதுகாப்பிற்கு நாம் அனைவரும் குரல் கொடுப்பது” என்பதாகும்.
உலக சீரான வர்த்தக தினம் - 12 மே 2018 (மே மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை)
  • உலக சீரான வர்த்தக தினமானது உலக சீரான வர்த்தக அமைப்பின் (WFTO - World Fair Trade Organisation) முன்முயற்சியாகும்.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது, “தக்க நேரத்தில் ஒரே பொருளைக் கொண்டு சீராக வாழு” என்பதாகும்.
மே - 13
சர்வதேச அன்னையர்கள் தினம் - 13 மே 2018 (மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு)
  • அமெரிக்காவில் அன்னையர்கள் தினத்தை நிறுவியவர் அன்னா மேரி ஜார்விஸ் (மே 1, 1864 - நவம்பர் 24, 1948) என்பவர் ஆவார்.
  • 1905 ஆம் ஆண்டு அன்னா ஜார்விஸ் என்பவரின் அன்னை இறந்த பின்பு 1908 ஆம் ஆண்டு மேற்கு விர்ஜினியாவின் கிராப்டோனில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ மெத்தோடிஸ்ட் சர்ச்சில் தனது அன்னையின் நினைவாக நினைவுச் சின்னம் எழுப்பியபோது அத்தினம் அன்னையர்கள் தினம் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • 1914 ஆம் ஆண்டு அன்னையர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவின் வுட்ரோ வில்சன் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர்கள் தினமாக அறிவித்து, தேசிய விடுமுறையாக அறிவித்தார்.
மே - 15
சர்வதேச குடும்பங்கள் தினம்
  • சர்வதேச குடும்பங்கள் தினம் 1993 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையினால் அறிவிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டைக் கடைபிடிப்பதன் மூலம் குடும்பங்கள் மற்றும் குடும்பக் கொள்கைகள் ஆகியவற்றின் பங்களிப்பானது நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை அடைய உதவும்.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது, “குடும்பங்கள் மற்றும் அவற்றை உள்ளடக்கிய சமூகங்கள்” என்பதாகும்.
மே - 16
சர்வதேச ஒளி தினம்
  • 1960 ஆம் ஆண்டில் இயற்பியலாளர் மற்றும் பொறியாளரான தியோடர் மெய்மன் என்பவரால் முதன்முறையாக லேசர் செயல்பாடு வெற்றியடைந்ததைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று சர்வதேச ஒளி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது யுனெஸ்கோவினால் கடைபிடிக்கப்படுகிறது.
அமைதியாக ஒன்றிணைந்து வாழ்தலுக்கான சர்வதேச தினம்
  • மே மாதம் 16 ஆம் தேதியை அமைதியாக ஒன்றிணைந்து வாழ்தலுக்கான சர்வதேச தினமாக ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது.
  • 1997 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையானது “அமைதிக் கலாச்சாரத்திற்கான சர்வதேச ஆண்டாக” 2000 ஆம் ஆண்டை அறிவித்தது.
  • மேலும் 1998 ஆம் ஆண்டு “அமைதிக் கலாச்சாரத்திற்கான சர்வதேச தசாப்த ஆண்டு மற்றும் உலகத்தில் உள்ள குழந்தைகளுக்கான அகிம்சை ஆண்டாக” 2001 ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு கால கட்டத்தை ஐ.நா. அறிவித்துள்ளது.
  • 1999 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையானது அமைதிக் கலாச்சாரத்திற்கான திட்ட நடவடிக்கைகள் மற்றும் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
மே - 17
சர்வதேச உயர் இரத்த அழுத்த தினம்
  • சர்வதேச உயர் இரத்த அழுத்த தினம் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக உயர் இரத்த அழுத்தக் கூட்டிணைவால் (WHC - The World Hypertension League) அறிவிக்கப்பட்டது.
  • உலக உயர் இரத்த அழுத்தக் கூட்டிணைவானது முதன்முறையாக 2005 ஆம் ஆண்டு மே 14 அன்று சர்வதேச உயர் இரத்த அழுத்த தினத்தை அறிமுகப்படுத்தியது.
  • 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதி சர்வதேச உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துரு: “உனது எண்ணிக்கைகளை தெரிந்துகொள்” என்பதாகும்.
உலக தொலைத் தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம்
  • 1865 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சர்வதேச தொலைத் தொடர்பு தொழிற்சங்கம் (ITU- International Telecommunication Union) மற்றும் முதலாவது சர்வதேச தந்தி ஒப்பந்தத்தின் மீதான கையெழுத்து ஆகியவற்றின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துரு : “செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அனைத்துக்கும் பயன்படுவதை வெளிப்படுத்துவது” என்பதாகும்.
தன்பாலின, மூன்றாவது பாலின மற்றும் இருபாலினத்தவர் மீதான அச்சத்திற்கு எதிரான சர்வதேச தினம்
  • இத்தினம் மே 17 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இதன் நோக்கம் உலகளவில் LGBT (lesbian, gay, bisexual, and transgender) உரிமைகளுக்கான பணியின் மீது நாட்டத்தை அதிகப்படுத்துவது மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சர்வதேச நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதாகும்.
  • 1990 ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச நோய்களுக்கான வகைப்பாட்டிலிருந்து ஓரினச் சேர்க்கையை நீக்க முடிவு எடுத்ததைக் கொண்டாடும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துரு : “ஒற்றுமைக்கான கூட்டணி” என்பதாகும்.
சர்வதேச அருங்காட்சியக தினம்
  • இத்தினம் 1977 ஆம் ஆண்டு முதல் அரசு சாரா, நிரந்தர நிறுவனமான சர்வதேச அருங்காட்சியக ஆணையத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துரு : “அருங்காட்சியகங்களை உயர் அளவில் இணைப்பது : புதிய வழிமுறைகள், பொதுமக்கள்” என்பதாகும்.
உலக எய்ட்ஸ் தடுப்பு தினம்
  • இது எச்ஐவி தடுப்பு விழிப்புணர்வு தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • உலக எய்ட்ஸ் தடுப்பு தினமானது 1997 ஆம் ஆண்டு மோர்கன் மாகாணப் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் தொடக்க உரையிலிருந்துத் தொடங்கியது.
  • முதலாவது உலக எய்ட்ஸ் தடுப்பு தினமானது 1998 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி பில் கிளிண்டன் நிகழ்த்திய உரையின் நினைவாக அனுசரிக்கப்பட்டது.
 மே - 20
உலக அளவியல் தினம்
  • 1875 ஆம் ஆண்டு மே 20 அன்று மீட்டர் உடன்படிக்கையில் 17 நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டதைக் கொண்டாடும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • மீட்டர் உடன்படிக்கையின் உண்மையான நோக்கம் உலகளவில் அளவீடுகள் சீரான அளவில் இருப்பதாகும். இந்த அளவீடுகள் 1875 ஆம் ஆண்டில் இருந்ததைப் போல தற்காலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
  • தற்பொழுது உலக அளவியல் தினமானது சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகள் ஆணையம் மற்றும் சர்வதேச மெய் அளவியல் ஆணையத்தால் அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டின் உலக அளவியல் தினத்தின் கருத்துருவானது, “சர்வதேச அமைப்புகளின் நிலையான பரிணாம வளர்ச்சி” என்பதாகும்.
உலக தேனீக்கள் தினம்
  • 18 ஆம் நூற்றாண்டில் ஸ்லோவேனியாவில் நவீன தேனிக்கள் வளர்ப்பு முறைகளின் முன்னோடியான அன்டோன் ஜன்சா என்பவரின் பிறந்த தினத்துடன் மே 20 தினம் ஒன்றிப் பொருந்துகிறது.
  • 2016 ஆம் ஆண்டில் தேனீ வளர்ப்பாளர் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பான அபிமோண்டியா மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO - Food and Agriculture Organization) ஆகியவற்றின் உதவியுடன் ஸ்லோவேனியா குடியரசினால் இந்த தினத்தை கடைபிடிப்பதற்கான பரிந்துரை செய்யப்பட்டது.
  • 2017 ஆம் ஆண்டு உலக தேனீக்கள் தினத்தின் பரிந்துரையானது உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 40வது பதிப்பின் போது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
  • 2017 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையானது மே 20 ஆம் தேதியை உலக தேனீக்கள் தினமாக ஒருமனதாக அறிவித்தது.
  • 2018 ஆம் ஆண்டு மே 20 அன்று முதன்முறையாக தேனீக்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.
மே - 21
சர்வதேச கலாச்சார பன்முகத்தன்மைக்கான பேச்சு வார்த்தை மற்றும் வளர்ச்சி தினம்
  • 2001 ஆம் ஆண்டு கலாச்சார பன்முகத்தன்மை மீதான உலகளாவிய பிரகடனத்தை யுனெஸ்கோ ஏற்றுக் கொண்டது.
  • 2002 ஆம் ஆண்டு டிசம்பரில் ஐ.நா. பொதுச் சபையானது மே 21 ஆம் தேதியை சர்வதேச கலாச்சார பன்முகத் தன்மைக்கான பேச்சுவார்த்தை மற்றும் வளர்ச்சி
  • 1991 ஆம் ஆண்டு மே 21 அன்று இந்தியாவின் ஏழாவது பிரதமரான ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்பு தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • வி.பி.சிங் தலைமையிலான அப்போதைய மத்திய அரசாங்கம் மே 21 ஆம் தேதியை தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
மே - 22
சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம்
  • ஐ.நா. ஆனது பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் புரிதல் ஆகியவற்றை அதிகரிப்பதற்காக மே 22 ஆம் தேதியை சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினமாக அறிவித்தது.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துரு : “பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான 25 ஆண்டுகால நடவடிக்கைகள்” என்பதாகும்.
மே - 23
உலக கடல் ஆமைகள் தினம்
  • 2000 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஆமைகள் மீட்டெடுப்பு (American Tortoise Rescue) நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • கடல் ஆமைகள் மற்றும் நில ஆமைகள் குறித்த புரிதலை அதிகரிப்பதற்காக மற்றும் அவற்றிற்கு மதிப்பளிப்பதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • மேலும் மனித நடவடிக்கைகளின் மூலம் கடல் ஆமைகள் உயிர் வாழ மற்றும் வளர்ச்சி அடைய இத்தினம் ஊக்கப்படுத்துகிறது.
  • 1990 ஆம் ஆண்டு இத்தினம் தொடங்கப்பட்டது.
  • “உலக ஆமைகள் தினம்” என்ற தொடரானது கலிபோர்னியாவின் மலிபூவின் சுசன் டெல்லம் என்பவரால் முத்திரையிடப்பட்டது.
மகப்பேறியல் புரை ஒழிப்பிற்கான சர்வதேச தினம்
  • ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வதற்கான நீடித்த வளர்ச்சி இலக்கு 3-ஐ எட்ட மகப்பேறியல் புரை தடுப்பு மற்றும் மருத்துவமுறை பங்களிக்கிறது. இந்தக் கூற்றில், தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முக்கியமானதாகும்.
  • 2013 ஆம் ஆண்டு முதல் ஐ.நா. மக்கள்தொகை நிதியானது மகப்பேறியல் புரை ஒழிப்பிற்கான சர்வதேச தினத்தை அனுசரிக்கிறது.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது : “யாரும் இதிலிருந்து விடுபடாமல் - இப்பொழுதே புரையை ஒழிக்க உறுதியேற்போம்” என்பதாகும்.
மே - 25
காணாமல் போன குழந்தைகளுக்கான சர்வதேச தினம்
  • இத்தினம் மே 25 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதே தினம் அமெரிக்காவின் “காணாமல் போன குழந்தைகளுக்கான தேசிய தினமாக” ரொனால்டு ரீகனால் 1983-ல் அறிவிக்கப்பட்டது.
  • இது காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான சர்வதேச மையம் (ICMEC - International Centre for Missing and Exploited Children) மற்றும் அமெரிக்காவின் காணமால் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளின் மையம் ஆகியவற்றின் கூட்டுப் பங்களிப்புடன் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • காணாமல் போன குழந்தைகளுக்கான சர்வதேச அமைப்பு (GMCN - Global Missing Children’s Network) என்பது காணாமல் போன குழந்தைகள் பற்றிய விசாரணையை மேம்படுத்துவதற்காக காணாமல் போன குழந்தைகளின் தகவல்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை சிறந்த முறையில் பகிர்தலுக்காக பல நாடுகள் இணைந்த அமைப்பாகும்.
உலக தைராய்டு தினம்
  • முதன்முறையாக 2008 ஆம் ஆண்டு உலகளவில் தைராய்டு மற்றும் கண்ணுக்குப் புலனாகாத அறிகுறிகளுக்கான ஒரு தினத்தை அனுசரிப்பதற்காக ஐரோப்பிய தைராய்டு மன்றம் (ETA - European Thyroid Association) மற்றும் அமெரிக்க தைராய்டு மன்றம் ஆகியவை கூட்டு சேர்ந்தன.
  • 2009 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் தைராய்டுக்கான தினமாக மே 25 ஆம் தேதி உலக தைராய்டு தினம் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் தினத்துடன் சர்வதேச தைராய்டு விழிப்புணர்வு வாரமும் ஏற்படுத்தப்பட்டது.
&

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்