TNPSC Thervupettagam

உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் - பகுதி 2

December 11 , 2023 144 days 289 0

(For English version to this please click here)

உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம்

சரத்து 16

  • பருவ வயது நிறைந்த ஆண்களும் பெண்களும், இனம், தேசியம் அல்லது மதம் காரணமாக எந்தவொரு வரம்பும் இல்லாமல், திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த உரிமை உண்டு.
  • திருமணத்தின் உறவின் போதும், ​​திருமணம் நடைபெறும் போதும் மற்றும் அது கலைக்கப்படும் போதும் அவர்கள் சம உரிமைகளைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள் ஆவர்.
  • உத்தேசித்திருக்கும் வாழ்க்கைத் துணைகளின் சுயாதீன மற்றும் முழு சம்மதத்துடன் மட்டுமே திருமணம் செய்து கொள்ளப்பட வேண்டும்.
  • குடும்பம் என்பது சமூகத்தின் இயற்கையான மற்றும் அடிப்படையான குழு அலகாகச் செயல்படுவதோடு, அதற்கு சமூகம் மற்றும் அரசின் பாதுகாப்பினைப் பெறுவதற்கும் உரிமை உண்டு.

சரத்து 17

  • ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் மற்றவர்களுடன் கூட்டுச் சேர்ந்தும் சொத்து வைத்திருக்கவும், அவற்றினைப் பாதுகாக்கவும் உரிமை உண்டு.
  • எவருடைய சொத்தையும் தன்னிச்சையாகப் பறிக்கக் கூடாது.

சரத்து 18

  • சிந்தனை செய்வது, மனச்சான்றுடன் வாழ்வது மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவற்றினைப் பெற அனைவருக்கும் உரிமை உண்டு.
  • இந்த உரிமையானது தனது மதம் அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரத்தையும், தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் சமூகமாகவோ, பொது அல்லது தனிப்பட்டதாகவோ, தனது மதம் அல்லது நம்பிக்கையைக் கற்பித்தல், நடைமுறைப்படுத்துதல், வழிபாடு மற்றும் கடைப்பிடித்தல் ஆகியவற்றில் வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் உள்ளடக்கியது.

சரத்து 19

  • தனது கருத்தினை மற்றவர்களிடம் எடுத்துரைக்கவும், வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமானது அனைவருக்கும் உள்ளது.
  • இந்த உரிமையானது, எந்த ஒரு ஊடகத்தின் மூலமாகவும், கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல், குறுக்கீடு இல்லாமல் தனது கருத்துக்களை வைத்திருப்பதற்கும், தகவல்களைப் பெறுவதற்கும் மற்றும் வழங்குவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கியது.

சரத்து 20

  • அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், சங்கங்களையும் அமைப்புகளையும் ஏற்படுத்துவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு.
  • எவரையும் இச்சங்கத்தில் இணைவதற்காக கட்டாயப்படுத்த இயலாது.

சரத்து 21

  • ஒவ்வொருவருக்கும் தனது நாட்டின் அரசாங்கத்தில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்கு கொள்ள உரிமை உண்டு.
  • ஒவ்வொருவருக்கும் அவரவர் நாட்டில் பொதுச் சேவையில் ஈடுபட சம உரிமை உண்டு.
  • மக்களின் விருப்பங்களே அரசாங்க அதிகாரத்தின் அடிப்படையாக விளங்குகிறது.
  • இந்த நடைமுறையானது, குறிப்பிட்ட காலத்தில் மற்றும் உண்மையான தேர்தல்களில் வெளிப்படுத்தப் படுவதோடு, இது உலகளாவிய மற்றும் சமமான வாக்குரிமை மூலமும் மற்றும் இரகசிய வாக்கெடுப்பு அல்லது அதற்குச் சமமான இலவச வாக்களிப்பு நடைமுறைகள் மூலமும் நடத்தப்படுகிறது.

சரத்து 22

  • அனைவரும், சமூகத்தின் உறுப்பினர்களாவதற்கு உரிமை உண்டு.

சரத்து 23

  • வேலை செய்வதற்கும், சுதந்திரமான வேலைவாய்ப்பைத் தேர்ந்தெடுப்பதற்கும், நியாயமான மற்றும் சாதகமான வேலை நிலைமைகள் மற்றும் வேலையின்மைக்கு எதிராகப் பாதுகாப்பினைப் பெறுவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு.
  • எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சம வேலைக்குச் சம ஊதியம் பெறுவதற்கு உரிமை உண்டு.
  • பணி புரியும் ஒவ்வொருவருக்கும் நியாயமான மற்றும் சாதகமான ஊதியம் பெறுவதற்கும், தனக்கும் தனது குடும்பத்திற்கும் மனித கண்ணியத்திற்கும் தகுதியான இருப்பை உறுதி செய்து கொள்வதற்கும், தேவைப்பட்டால், பிற சமூகப் பாதுகாப்பின் மூலம் கூடுதலாக வழங்கப்படுகின்ற சலுகைகளைப் பெறுவதற்கும் உரிமை உண்டு.
  • ஒவ்வொருவருக்கும் தங்களது நலன்களைப் பாதுகாப்பதற்காக தொழிற் சங்கங்களை உருவாக்குவதற்கும் அதில் சேருவதற்கும் உரிமை உண்டு.

சரத்து 24

  • வேலை நேரத்தின் நியாயமான வரம்பு மற்றும் ஊதியத்துடன் கூடிய கால விடுமுறைகள் உட்பட அனைவருக்கும் ஓய்வு மற்றும் ஓய்வுக்கான உரிமைக்கான வசதிகளைப் பெறுவதற்கும் உரிமை உள்ளது.

சரத்து 25

  • உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் மற்றும் தேவையான சமூக சேவைகள் உட்பட, தனக்கும் தங்களது குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் போதுமான வாழ்க்கைத் தரத்தினைப் பெறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.
  • வேலையில்லாத் திண்டாட்டம், நோய், இயலாமை, விதவை, முதுமை அல்லது பிற வாழ்வாதாரக் குறைபாடு போன்ற சூழ்நிலைகளில் அவரது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலையில் அவற்றில் இருந்து பாதுகாப்பினை பெறுவதற்கு வேண்டிய உரிமையானது அனைவருக்கும் உள்ளது.
  • தாய்மை காலக்கட்டம் மற்றும் குழந்தைப் பருவத்திற்கான சிறப்புக் கவனிப்பு சேவைகள் மற்றும் உதவிகளைப் பெற உரிமை உண்டு.
  • அனைத்துக் குழந்தைகளும், திருமணப் பந்தத்தின் மூலம் பிறந்தாலும் சரி, திருமணத்திற்கு வெளியேயான உறவின் மூலம் பிறந்தாலும் சரி, ஒரே வகையான சமூகப் பாதுகாப்பினைப் பெற உரிமை உண்டு.

சரத்து 26

  • அனைவருக்கும் கல்வி பெற உரிமை உண்டு.
  • குறைந்தபட்சமாக ஆரம்ப மற்றும் அடிப்படை நிலையிலான கல்வியானது இலவசமாக இருத்தல் வேண்டும் மற்றும் தொடக்கக் கல்வியானது கட்டாயமாக்கப் பட வேண்டும்.
  • தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் கல்வியானது பொதுவாக கிடைக்கப்பெற வேண்டும் மற்றும் உயர்கல்வியானது தகுதியின் அடிப்படையில் அனைவராலும் சமமாக அணுகப்பட வேண்டிய நிலையில் இருத்தல் வேண்டும்.
  • கல்வியானது மனித ஆளுமையின் முழு வளர்ச்சிக்கும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுக்கான மரியாதையை வலுப்படுத்துவதற்கும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் இருத்தல் வேண்டும்.
  • இது அனைத்துத் தேசங்களின், இனம் அல்லது மதக் குழுக்களிடையே புரிதலையும், சகிப்புத் தன்மை மற்றும் நட்பையும் ஊக்குவிப்பதோடு, மேலும் அமைதியைப் பேணுவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது.
  • பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வியைத் தேர்ந்தெடுப்பதற்கான முன்னுரிமையும் உண்டு.

சரத்து 27

  • சமூகத்தின் கலாச்சார வாழ்வில் சுதந்திரமாகப் பங்கேற்கவும், கலைகளை ரசிக்கவும், அறிவியல் முன்னேற்றம் மற்றும் அதன் பயன்களில் பங்கு பெறவும் அனைவருக்கும் உரிமை உண்டு.
  • ஒவ்வொருவருக்கும் அவர் படைப்பாளராக இருக்கும் எந்தவொரு அறிவியல், இலக்கியம் அல்லது கலைத் தயாரிப்பின் விளைவாக ஏற்படும் தார்மீக மற்றும் பொருள் நலன்களைப் பாதுகாக்க உரிமை உண்டு.

சரத்து 28

  • இந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை முழுமையாக உணரக் கூடிய வகையில், ஒரு சமூகமாக மற்றும் சர்வதேச ஒழுங்கமைப்பில் செயல்பட அனைவருக்கும் உரிமை உண்டு.

சரத்து 29

  • ஒவ்வொருவருக்கும் சமூகத்திற்கான சில கடமைகள் உள்ளன.
  • அதில் மட்டுமே அவரது ஆளுமையின் சுதந்திரமான மற்றும் முழுமையான வளர்ச்சி சாத்தியமாகும்.

  • ஒருவரது உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பயன்படுத்துவதில் எவ்வாறு செயல்படுகிறோமோ அதே நேரத்தில் ஒவ்வொருவரும் மற்றவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு உரிய அங்கீகாரம், மரியாதை மற்றும் ஒரு ஜனநாயக சமுதாயத்தில் ஒழுக்கம், பொது ஒழுங்கு, பொது நலன் ஆகியவற்றின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
  • இந்த உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை, ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக எந்த வகையிலும் பயன்படுத்தப்படக் கூடாது.

சரத்து 30

  • இந்தப் பிரகடனத்தில் உள்ள எதுவும், எந்தவொரு அரசிற்கும், குழுவிற்கும் அல்லது நபருக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதற்கு அல்லது இங்கு குறிப்பிடப் பட்டுள்ள எந்தவொரு உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அழிக்கும் நோக்கில் எந்தவொரு செயலைச் செய்வதற்கும் என்று எந்தவொரு உரிமையையும் குறிப்பிடவில்லை.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்