TNPSC Thervupettagam

சரத்து 370 மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு – பகுதி 1

March 16 , 2024 48 days 374 0

(For English version to this, please click here)

சரத்து 370 மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

  • 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி அன்று மதிப்பக்குரிய இந்திய உச்ச நீதிமன்றமானது 370 மற்றும் 35A ஆகிய சரத்துக்களை ரத்து செய்தது தொடர்பான வரலாற்றுத் தீர்ப்பினை வழங்கியது.
  • உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநாட்டியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி 370வது சரத்தினை ரத்து செய்ய முடிவு எடுக்கப் பட்டது.
  • இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்கு கொண்டு வந்து ள்ளது.
  • இது அரசியலமைப்பின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக செய்யப்பட்டதே தவிர, அதனை சிதைப்பதற்காக அல்ல.
  • 370வது சரத்து நிரந்தரமானது அல்ல என்ற உண்மையையும் நீதிமன்றமானது அங்கீகரித்துள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்யும் ஜனாதிபதியின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக உறுதி செய்துள்ளது.
  • முன்னாள் ஜம்மு காஷ்மீர் (J&K) மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தினை 370வது சரத்து வழங்கியுள்ளது.

http://drishtiias.com/images/uploads/1702473533_Bifurcation_of_J&K.jpg

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த வரலாறு

சுதந்திரத்திற்கு முன்

  • 1846 ஆம் ஆண்டு முதல் 1858 ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், ஜம்மு காஷ்மீர் மாநிலமானது பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் கொண்டு வரப்பட்ட துணைப்படைத் திட்டத்தின் கூட்டணியில் ஒரு சுதேச மாநிலமாக இருந்தது.
  • இது பின்னர் 1947 ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் வந்தது.
  • காஷ்மீர் பள்ளத்தாக்கை சீக்கியர்களிடம் இருந்து போர் இழப்பீடாக இணைத்த கிழக்கிந்திய நிறுவனமானது, அதை ஜம்முவின் மகாராஜாவான குலாப் சிங்கிற்கு விற்றது.
  • பிரிட்டிஷ் இராட்சியத்தின் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் இருந்தது, ஆனால் அதன் இறையாண்மையை அனுபவித்தது.
  • வெளியாட்கள் இந்த மாநிலத்தில் சொத்துக்களை வைத்திருக்கவும் அனுமதிக்கப் பட வில்லை.

http://drishtiias.com/images/uploads/1702473729_Judgment_on_Art_370.png

சுதந்திரத்திற்குப் பின்

  • பிரிவினையின் போது, ​​ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளரான மகாராஜா ஹரி சிங், இந்தியாவுடனும்  சேர வேண்டாம் பாகிஸ்தானுடனும் சேர வேண்டாம் என்று முடிவு செய்தார்.
  • 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்த பழங்குடிப் போராளிகள் அந்நாட்டின் ஸ்தாபனத்தின் ஆதரவுடன் படையெடுத்த போது, அப்படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு உதவியாக புது தில்லி அரசினை ஜம்மு காஷ்மீர் மகாராஜா அழைத்தார்.
  • அப்போதைய பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேருவின் தலைமையிலான இந்திய அரசாங்கம், உதவி வழங்க ஒப்புக் கொண்டது, ஆனால் மகாராஜாவை சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தத்தில் (IoA) கையெழுத்திடுமாறும் கேட்டுக் கொண்டது.
  • 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி அன்று  IoA  ஒப்பந்தமானது மகாராஜா ஹரி சிங் அவர்களால் கையெழுத்திடப்பட்டது.
  • ஆனால் அவரால் குறிப்பிடத்தக்க அளவு சுயாட்சியுடன் புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியாவுடன் இணைவதற்கு ஒப்புக் கொள்ளப் பட்டது.

சரத்து 370 என்றால் என்ன?

  • இந்திய அரசியலமைப்பின் 370வது சரத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தினை வழங்குகிறது.
  • இது கோபாலசுவாமி அய்யங்கார் அவர்களால் வரைவு செய்யப்பட்டது.
  • அவர் இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தவர்.
  • 1949 ஆம் ஆண்டு 'தற்காலிக விதியாக' இந்திய அரசியலமைப்பில் 370வது சரத்து சேர்க்கப்பட்டது.
  • இது அம்மாநிலத்திற்கு, அதன் சொந்த அரசியலமைப்பு மற்றும் கொடியை வைத்திருக்க அனுமதித்தது.
  • இது சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது.

தோற்றம்

  • இந்திய அரசியலமைப்பின் 370வது சரத்தானது XXI பகுதியில் "தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு விதிகள்" என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • பாதுகாப்பு, வெளிவிவகாரம் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய 3 பட்டியல்களைத் தவிர அம்மாநிலத்தின் உள் நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களிலும் இது அதன் சுயாட்சியை உறுதி செய்கிறது.
  • இந்திய அரசியலமைப்பின் விதிகளில் சரத்து 1 (இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்) மற்றும் சரத்து 370 ஆகியவை (ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடர்பான தற்காலிக விதிகள்) தவிர இதர விதிகள் எதுவும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குப் பொருந்தாது.
  • ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் ஒப்புதலுடன், சரத்து 370 இன் உட்பிரிவு (1) (d) ஆகியவற்றின் கீழ் ஒரு நிர்வாக ஆணையின் மூலம் இந்திய அரசியலமைப்பின் பிற விதிகளை நீட்டிக்க இந்திய ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
  • சரத்து 370 (3) இன் கீழ் குடியரசுத் தலைவருக்கு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ 'சரத்து 370 செயல்படாது என்று அறிவிக்கும்' அதிகாரமானது வழங்கப் பட்டுள்ளது.
  • 1952 ஆம் ஆண்டு டெல்லி ஒப்பந்தமானது கையெழுத்தானது.
  • இது இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புடன் சேர்த்து கூடுதலாக  அந்த மாநிலத்தின் குடியுரிமை, மாநிலத்திற்கான அடிப்படை உரிமைகள் தொடர்பான இந்திய அரசியலமைப்பின் விதிகள் ஆகியவற்றையும் நீட்டித்துள்ளது.

http://drishtiias.com/images/uploads/1702461160_image%20(1).png

சரத்து 35A என்றால் என்ன?

தோற்றம்

  • 1954 ஆம் ஆண்டு 370வது சரத்தின் கீழ் விதிக்கப்பட்ட  குடியரசுத் தலைவரின் ஒரு உத்தரவின் மூலம் கொண்டு வரப்பட்ட திருத்தங்களின் ஒரு பகுதியாக இது உள்ளீடு செய்யப்பட்டது.

சிறப்பம்சங்கள்

  • இது அம்மாநிலத்தின் நிரந்தரக் குடியிருப்பாளர்களைத் தீர்மானிக்கவும் அல்லது அது தொடர்பான விதிகளை வரையறுக்கவும் தேவையான ஒரு முழுமையானச் சுதந்திரத்தினை ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்குகிறது.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர் என்பது 1954 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி அன்று முதல் அம்மாநிலத்திற்கு உட்பட்ட நபராகவோ அல்லது அம்மாநிலத்தில் 10 ஆண்டுகளாக வசிப்பவராகவோ இருத்தல் வேண்டுமென என வரையறுக்கப் படுகிறது.
  • இது நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு சிறப்பு உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்க ஜம்மு காஷ்மீர் மாநிலத்தினை அனுமதிக்கிறது, அதாவது:
  • பொது வேலை வாய்ப்பு
  • அம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை கையகப்படுத்துதல்
  • அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடியேற்றம் மேற்கொள்ளுதல்
  • உதவித் தொகைக்கான அணுகல்
  • மாநில அரசு வழங்கக் கூடிய பிற உதவிகள் ஆகியவையாகும்.

http://drishtiias.com/images/uploads/1702365372_Security%20Situation%20In%20J&K%20after%20Abrogation%20of%20Article%20370.png

  • நிரந்தரக் குடியிருப்பாளர்களைப் பொறுத்தவரையில், எந்த ஒரு அடிப்படை உரிமையினையும் மீறுகிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களின் குடியுரிமையினை ரத்து செய்வது தொடர்பான ஒரு சட்டத்திலிருந்து இது விலக்கு அளிக்கிறது.
  • இது ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் பெண்களுக்கு, அவர்கள் அம்மாநிலத்திற்கு வெளியில் வசிக்கும் ஒரு நபரைத் திருமணம் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு சொத்துரிமையிலிருந்து விலக்களிக்கிறது.
  • மேலும் வெளியாட்கள் நிரந்தரமாக இம்மாநிலத்தில் குடியேறுவதையும், நிலம் வாங்குவதையும், உள்ளூர் அரசாங்க வேலைகளைப் பெறவும் அல்லது இப்பகுதியில் கல்வி உதவித் தொகை பெறுவதையும் இது தடை செய்கிறது.

சட்டப் பிரிவு 370 எப்படி நீக்கப்பட்டது?

  • இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் பல்வேறு விதிகளின் விளக்கம் குறித்து 367வது சரத்து வழிகாட்டுகிறது.
  • அரசியலமைப்பில் பயன்படுத்தப்படும் சொற்கள் மற்றும் சொற்றொடர்களின் பொருளைத் தீர்மானிப்பதற்கான விதிகளாக இது அமைக்கப் பட்டுள்ளது.

அரசியலமைப்பு ஆணை 272 (2019)

  • இந்த ஆணையானது 367வது சரத்த்தினைத் திருத்தியதோடு, இதன் மூலம் 370வது சரத்தில் அரசியலமைப்புச் சபை என்பது அம்மாநிலத்தின் சட்டமன்றத்தைக் குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
  • அந்த நேரத்தில் (2019), அம்மாநிலமானது குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் இருந்தது.
  • எனவே மாநில சட்டப் பேரவைக்கு பதிலாக குடியரசுத் தலைவர் அவ்வுத்தரவினைப் பிறப்பித்தார்.

அரசியலமைப்பு ஆணை 273 (2019)

  • மாநிலங்களவையின் பரிந்துரையின் பேரில், சரத்து 370 ஆனது செயலிழந்து விடும் என்று குடியரசுத் தலைவர் திறம்பட அறிவித்தார்.
  • இதன் மூலம் இந்திய அரசியலமைப்பின் விதிகளானது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குப் பொருந்துமென்று அறிவிக்கப் பட்டது.

2019 ஆம் ஆணைகள் மூலம் கொண்டு வரப்பட்ட முக்கிய மாற்றங்கள்

அரசியலமைப்பு (ஜம்மு காஷ்மீர் மாநில ஆணைக்கான விண்ணப்பம்) ஆணை, 2019

  • 1954 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் ஆணையானது, 2019 ஆம் ஆண்டு (ஜம்மு காஷ்மீர் மாநில ஆணைக்கான விண்ணப்பம்) குடியரசுத் தலைவரின் ஆணையின் மூலம் மாற்றப் பட்டுள்ளது.
  • அதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு மசோதாவானது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்டு, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தினை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களாக அது பிரித்தது.
  • ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.

  • தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திடமுள்ள 6 மக்களவைத் தொகுதிகளில் ஐந்து இடங்களானது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும், ஒன்று லடாக்கிற்கும் ஒதுக்கப் படும்.
  • டெல்லி மற்றும் புதுச்சேரியில் இருப்பது போல ஒரு சட்டமன்றமானது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைக்கப்படும்.
  • சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் காணப்படும்.
  • காஷ்மீருக்கு இனி ஆளுநர் நியம்மிக்கப்படாமல், மாறாக டெல்லி அல்லது புதுச்சேரியைப் போல துணை ஆளுநர் அதற்கு நியமிக்கப் படுவார்.

ஜம்மு காஷ்மீரின் நிலை

  • ஜம்மு காஷ்மீரின் சட்டசபையின் ஆயுட்காலம் முந்தைய நிலையைப் போல ஆறு ஆண்டுகள் அல்லாமல், ஐந்தாண்டு காலமாக இருக்கும்.
  • 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மசோதாவின் பிரிவு 32 என்பதின் கீழ் “பொது ஒழுங்கு” மற்றும் “காவல்துறை” தொடர்பான மாநில விவகாரங்களைத் தவிர, மாநில மற்றும் பொதுப் பட்டியல்களில் உள்ள எந்தவொரு விவகாரத்திலும் அப்பகுதியின் சட்டமன்றமானது சட்டங்களை உருவாக்க முடியும் என்று முன்மொழிகிறது.
  • இது புதுச்சேரி மற்றும் டெல்லி யூனியன் பிரதேசங்களுக்குப் பொருந்தும் அரசியலமைப்பின் 239A சரத்திற்கு  ஒத்ததாகும்.
  • இருப்பினும், டெல்லி சட்டமன்றமானது மாநிலப் பட்டியலில் உள்ள 18வது பதிவில், அதாவது நிலம் தொடர்பான விவகாரங்களில் சட்டமியற்ற முடியாது என்று சரத்து 239AAவில் மேற்கொள்ளப்பட்ட 69வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் வரையறுக்கப் பட்டுள்ளது.
  • ஆனால் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றமானது அம்மாநில நிலம் தொடர்பான சட்டங்களை உருவாக்க முடியும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்