TNPSC Thervupettagam

சரத்து 370 மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு – பகுதி 3

March 29 , 2024 35 days 449 0

(For English version to this please click here)

சரத்து 370 மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

மேம்பட்ட பொருளாதார வளர்ச்சி

  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, பிரதமரின் மேம்பாட்டுத் தொகுப்பு (PMDP) மற்றும் தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம் (IDS) போன்ற பல்வேறு முயற்சிகளை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.
  • இந்த முன்முயற்சிகளானது அப்பகுதியில் அதிக முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பிராந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கு வழி வகுத்துள்ளது.
  • இந்த யூனியன் பிரதேசத்தின் வரி வருவாயானது சமீபத்தில் 31% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீரின் ஜிஎஸ்டிபி தேசிய அளவில் 7% ஆக இருந்த நிலையில், நிலையான விலையில் 8% ஆக வளர்ந்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு

  • ஜம்மு காஷ்மீரின்  உள்கட்டமைப்பு மேம்பாட்டிலும் அரசாங்கம் அதிக முதலீடுகளைச் செய்துள்ளது.
  • புதிய சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் மின் இணைப்புகள் போன்ற திட்டங்களும் இதில் அடங்கும்.
  • இந்த மேம்பாடுகள் மூலம் மக்கள் இப்பகுதிக்குள் பயணம் செய்வதையும் வணிகம் செய்வதையும் எளிதாக்கியுள்ளன.

சுற்றுலா அதிகரித்தல்

  • சரத்து 370 ஆனது ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
  • மேலும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, சிறந்த சந்தைப்படுத்தல் மற்றும் புதிய சுற்றுலா முயற்சிகளைத் தொடங்குதல் உள்ளிட்ட காரணிகளின் கலவையே இதற்கு காரணமாகும்.
  • ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ள தகவலின் படி, 2022 ஆம் ஆண்டில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியத்திற்கு 1.62 கோடி சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனர், என்ற நிலையில் இது இந்தியா சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் மிக அதிகமாகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

சரத்து 370ன் தன்மை

  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வரலாற்றுச் சூழல், அரசியலமைப்பின் பகுதி XXI இன் கீழ் இடம் பெற்ற அதன் வாசகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் 370வது சரத்தானது, ஒரு தற்காலிக ஏற்பாடாக இருத்தல் வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் உள் இறையாண்மை

  • 1949 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கரண் சிங் (ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளர்) பிரகடனத்தைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கென எவ்வித உள் இறையாண்மையும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
  • ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்திய அரசிற்கிடையேயான உறவினை இந்திய அரசியலமைப்பு நிர்வகிக்கும் என்று இப்பிரகடனம் குறிப்பிடுகிறது.
  • மற்ற சமஸ்தானங்களைப் போலவே இம்மாநிலமும், மாநில ஒருங்கிணைப்பின் விளைவினைக் கொண்டிருந்தது.
  • இருப்பினும், 1959 ஆம் ஆண்டு பிரேம்நாத் கவுல் எதிர் ஜம்மு-காஷ்மீர் வழக்கு தொடர்பான தீர்ப்பின் முடிவினை அரசியலமைப்பு சாசன அமர்வின் ஒரு நீதிபதி இதில் பின்பற்றியுள்ளார்.
  • 1959 ஆம் ஆண்டு தீர்ப்பின் மூலம் உள் இறையாண்மையின் ஒரு அங்கத்தினை அரசு தக்க வைத்துக் கொண்டது.

கூட்டாட்சி

  • சரத்து 370 ஆனது சமச்சீரற்ற கூட்டாட்சியின் அம்சமாக உள்ளது.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து என்பது அந்த மாநில சுயாட்சியின் உயர் பட்டம் தவிர, வேறு வகையான சுயாட்சி அல்ல.

ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு

  • ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு என்பது எப்போதுமே இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டது.
  • எனவே, அரசியலமைப்பு ஆணைகள் 272 மற்றும் 273 ஆகியவற்றிற்குப் பிறகு 370வது சரத்தானது செயலிழந்தது.

ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி

  • ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியின் செல்லுபடித் தன்மையினை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • 1994 ஆம் ஆண்டு ‘எஸ்ஆர் பொம்மை எதிர் இந்திய ஒன்றியம்' என்ற வழக்கின் முக்கிய தீர்ப்பைக் குறிப்பிட்டு குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகள் பகுத்தறிவற்றவை அல்ல என்று அது கூறியுள்ளது.
  • குடியரசுத் தலைவரானவர் மாநிலச் சட்டமன்றத்தின் அனைத்து அல்லது ஒரு குறிப்பிடத் தக்கப் பங்களிப்பினை மேற்கொள்ள முடியும் என்றும் மற்றும் அத்தகைய நடவடிக்கைகளை அசாதாரணமான வழக்குகளில் மட்டுமே நீதித்துறையால் சோதிக்கப்பட முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரத்து 356 இன் கீழ் பாராளுமன்றத்தின் அதிகாரம்

  • மாநிலச் சட்டமன்றத்தின் அதிகாரங்களானது, பாராளுமன்றத்தின் அதிகாரத்தால் அல்லது அதன் கீழ் செயல்படுத்தப்படும் என்று குடியரசுத் தலைவர் அறிவிக்கலாம் என சரத்து 356(1)(a) ஆனது குறிப்பிடுகிறது.
  • சட்டப் பேரவையின் அனைத்து அரசியலமைப்பு அதிகாரங்களையும் பாராளுமன்றம் பயன்படுத்த அனுமதிப்பது அம்மாநிலத்தின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் என்று நீதிமன்றம் கூறியது.
  • எவ்வாறாயினும், 356வது சரத்து நடைமுறையில் இருக்கும் போது கூட்டாட்சியின் அதிகாரத்தினைக் குறைப்பதை அரசியலமைப்பு அங்கீகரிக்கிறது.

சரத்து 3 இன் கீழ் மாநில மறுசீரமைப்பு

  • சரத்து 3 இன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தினை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கப் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கூறிள்ளது.
  • குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது, நாடாளுமன்றத்திடம் அனைத்து அதிகாரங்களும் சென்றடைவதோடு, அதன் பங்களிப்பும் காணப்படுவதால் மாநில மறுசீரமைப்பிற்கு அம்மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்றும் அது கூறியுள்ளது.
  • மேலும் மாநில அந்தஸ்தை விரைவில் மீட்டெடுக்குமாறும் ஒன்றிய அரசினை அது கேட்டுக் கொண்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு (TRC)

  • 1980 ஆம் ஆண்டுகளிலிருந்து ஜம்மு காஷ்மீரில், மாநில மற்றும் அரசு சாரா அமைப்புகளால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களைச் சரி செய்வதற்காக, தென்னாப்பிரிக்காவில் அதன் நிறவெறிக்குப் பிந்தைய காலத்தில் செய்தது போலவே TRC என்ற அமைப்பினை உருவாக்க நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தேர்தல்கள்

  • 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்குத் தேர்தலை நடத்துமாறு இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னோக்கிய பாதை

  • காஷ்மீரை மேம்படுத்துவதற்கு 3Es (கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு திறன்கள்) எனப்படும் 10 ஆண்டு கால உத்தியினைப் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஜம்மு காஷ்மீரில் ‘பூஜ்ஜிய-பயங்கரவாத சம்பவத்திற்கான’ திட்டம்

  • 2020 ஆம் ஆண்டு முதல் ‘பூஜ்ஜிய-பயங்கரவாத சம்பவத்திற்கான’ திட்டமானது ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் உள்ளது என்பதோடு, அது 2026 ஆம் ஆண்டு வரையில் வெற்றிகரமாகச் செயல்படும்.
  • காஷ்மீரில் நிலவும் சட்ட நெருக்கடியை தீர்க்க காந்திய வழியான அகிம்சை மற்றும் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும்.
  • அனைத்து காஷ்மீரிகளுக்கும் ஒரு விரிவான எல்லை கடந்த திட்டத்தைத் தொடங்குவதன் மூலம் 370வது சரத்தின் செயல்பாடுகளிலிருந்து வெளிப்படும் பல சவால்களை அரசாங்கம் குறைக்க முடியும்.

  • இந்தச் சூழலில், காஷ்மீர் தீர்வுக்கான அடல் பிஹாரி வாஜ்பாயின் காஷ்மீரியத், இன்சானியத் மற்றும் ஜம்ஹூரியத் (காஷ்மீரின் உள்ளடக்கிய கலாச்சாரம், மனிதாபிமானம் மற்றும் ஜனநாயகம்) ஆகியவற்றின் பதிப்பு, அந்த மாநிலத்தில் நல்லிணக்க சக்திகளின் அடித்தளமாக மாற வேண்டும்.
  • உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு 'ஏக் பாரத், ஷ்ரேஷ்டா பாரத்' கொள்கைகளை நிலை நிறுத்தியுள்ளது.
  • இது ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் நல்லாட்சிக்கானக் கூட்டு அர்ப்பணிப்பையும் ஒரு சக்தி வாய்ந்த நினைவூட்டலாகவும் செயல்படும் வகையில் காணப்படுகிறது.
  • இந்தத் தீர்ப்பானது, நமது தேசத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், ஒரு சமூகமாக நம்மை வரையறுக்கும் மதிப்புகளை வலுப்படுத்துவதற்கும் உள்ள உச்ச நீதிமன்றத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2023

  • 2023 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த மசோதா 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தினை திருத்தம் செய்கிறது.
  • இந்தச் சட்டமானது, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தினை ஜம்மு காஷ்மீர் (சட்ட மன்றத்துடன்) மற்றும் லடாக் (சட்டமன்றம் இல்லாத) யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைப்பதற்கான ஆணையினை வழங்குகிறது.

சட்டப் பேரவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கை

  • 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையானது, சட்டமன்றங்களில் எத்தனை இடங்களை அளிக்க வேண்டும் என்பது தொடர்பான விளக்கத்தினை அளிக்கிறது.
  • 1950 ஆம் ஆண்டு சட்டத்தின் இரண்டாவது அட்டவணையை 2019 ஆம் ஆண்டு சட்டம் திருத்தியதோடு, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் மொத்த இடங்களின் எண்ணிக்கையினை 83 ஆக மாற்றியது.
  • இந்த மசோதா மொத்த இடங்களின் எண்ணிக்கையை 90 ஆக அதிகரிக்கிறது.
  • மேலும் இது ஏழு இடங்களைப் பட்டியல் சாதியினருக்கும், ஒன்பது இடங்களைப்  பழங்குடியினருக்கும் ஒதுக்கி உள்ளது.

காஷ்மீரில் குடியேறியவர்கள் நியமனம் தொடர்பான முன்மொழிவு

  • காஷ்மீரில் புலம்பெயர்ந்த சமூகத்தினரிலிருந்து இரண்டு உறுப்பினர்களை துணை நிலை ஆளுநர் சட்டப் பேரவைக்கு நியமிக்கலாம் என்று இந்த மசோதா கூறுகிறது.
  • இந்த நியமன உறுப்பினர்களில் ஒருவர் பெண்ணாக இருத்தல் வேண்டும்.
  • 1989 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கு அல்லது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் இடம்பெயர்ந்த நபர்கள் மற்றும் நிவாரண ஆணையரிடம் பதிவு செய்யப்பட்டவர்கள் என புலம்பெயர்ந்தோர் வரையறுக்கப் படுகிறார்கள்.
  • புலம்பெயர்ந்தவர்களில் பின்வரும் காரணங்களால் பதிவு செய்யப்படாத நபர்களும் அடங்குவர்:
  • (i) எந்த ஒரு அலுவலகத்திலும் அரசுப் பணியில் இருத்தல்
  • (ii) அப்பகுதியிலிருந்து பணிக்காக வேண்டி இடம் பெயருதல் அல்லது
  • (iii) அவர்கள் இடம் பெயர்ந்த இடத்தில் அசையாச் சொத்தினை வைத்திருத்தல், ஆனால் குழப்பமானச் சூழ்நிலைகளால் அங்கு வசிக்க முடியாத நிலை.

இடம்பெயர்ந்த நபர்களின் நியமனம்

  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் இருந்து இடம் பெயர்ந்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினரைத் துணை நிலை ஆளுநர் சட்டப் பேரவைக்குப் பரிந்துரைக்கலாம் என்று இந்த மசோதா கூறுகிறது.
  • இடம் பெயர்ந்த நபர்கள் என்பவர்கள் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீரில் வசிக்கும் இடத்தை விட்டு வெளியேறிய அல்லது இடம்பெயர்ந்த நபர்களைக் குறிக்கும் மற்றும் அத்தகைய இடத்திற்கு வெளியே தொடர்ந்து வசிக்கும் நபர்களை குறிக்கிறது.

  • இத்தகைய இடப் பெயர்வானது, 1947-48, 1965 அல்லது 1971 ஆம் ஆண்டுகளில் உள் நாட்டுக் கலவரம் அல்லது அத்தகைய இடையூறுகள் குறித்த ஒரு பயம் காரணமாக நடந்திருத்தல் வேண்டும்.
  • இவர்களில் அத்தகைய நபர்களின் வாரிசுகளும் அடங்குவர்.
  • இந்த மசோதா தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாறியவர்களை பிரதிநிதித்துவப் படுத்த முயல்கிறது என்பதோடு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து (PoK) இடம் பெயர்ந்த மக்களுக்கு ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் ஒரு இடத்தையும் ஒதுக்குகிறது.

பின்னணி

  • சரத்து 370 ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, ஜம்மு-காஷ்மீரில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை வரையறுக்க தனி விதிகள் இருந்தன.
  • சரத்து 370 ரத்து செய்யப் பட்டதற்கும், இந்தப் பகுதியை யூனியன் பிரதேசமாக மாற்றியதற்கும் அடுத்து, 2020 ஆம் ஆண்டு எல்லை நிர்ணய ஆணையம் உருவாக்கப் பட்டது.
  • இந்த ஆணையம் ஜம்மு காஷ்மீரின் இடங்களை மட்டுமல்லாமல் அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்தின் இடங்களையும் பிரிக்கும் பணியை மேற்கொண்டது.
  • இதனை ஓராண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சமீபத்தில், இந்த ஆணைக் குழுவானது தனது எல்லை நிர்ணய நடவடிக்கையை முடித்தது.
  • இதன் விளைவாக ஜம்மு காஷ்மீரின் சட்டமன்ற இடங்களானது 107ல் இருந்து 114 ஆக உயர்ந்துள்ளது.
  • இது 2023 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதாவின் மூலம் எளிதாக்கப்படுகிறது.

இரண்டு மசோதாக்கள்

  • இது 2004 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தின் பிரிவு 2 என்பதைத் திருத்த முயல்கிறது.
  • பட்டியல் சாதியினர் (SCs), பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் (STs) மற்றும் பிற சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கு வேலைகள் மற்றும் தொழில்முறை நிறுவனங்களில் சேர்க்கை ஆகியவற்றில் இடஒதுக்கீட்டினை 2004 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் இடஒதுக்கீட்டுச் சட்டமானது வழங்கியது.
  • "பலவீனமான மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (சமூக சாதிகள்)" என்று முன்னர் விவரிக்கப்பட்ட ஒரு பிரிவினரின் பெயரிடலில் "இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று இந்தத் திருத்த மசோதா பரிந்துரை செய்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்