TNPSC Thervupettagam

பலன் தரும் பல்வகை சொத்து முதலீடு

February 24 , 2025 78 days 104 0

பலன் தரும் பல்வகை சொத்து முதலீடு

  • எம்எம் போர்ட்போலியோ நிர்வாக சேவை இடர் தணிப்பு, பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வருவாய், சொத்து ஒதுக்கீடு மற்றும் பன்முகப்படுத்தல் ஆகியவை முதலீட்டுக்கான அடிப்படைகளில் முதன்மையானவையாகும். இவற்றை ஒருவர் கடைபிடிக்கும் பட்சத்தில் அவருக்கு முதலீட்டு அனுபவம் என்பது மகிழ்ச்சியானதாகவும், மன அழுத்தமில்லாமலும் இருக்கும். மனம் மகிழ்சியாக இருக்கும்போது சிந்தனை தெளிவாகி அவரின், இலக்கு மற்றும் சாதனை எளிதாகி விடும்.
  • மேலும் இந்த அடிப்படை கொள்கைகள், சந்தை சுழற்சி எதுவானாலும், சந்தையில் நிச்சயமற்ற நிலை எதுவாக இருந்தாலும் நன்றாக சமாளிக்கும் தாரக மந்திரமாக இருக்கும். சொத்து ஒதுக்கீடு (அசெட் அலோகேஷன்) என்பது அனைத்து வகையான அத்தியாவசிய முதலீட்டு கொள்கைகளையும் உள்ளடக்கியது. நிரூபிக்கப்பட்ட சாதனையுடன் கூடிய நீண்டகாலமாக நடப்பில் உள்ள வெற்றிகர திட்டமாகும்.
  • முதலீட்டு அபாயத்தை குறைப்பதுடன் இது ஒரு எளிய மற்றும் பயனுள்ள அணுகுமுறையை உள்ளடக்கியது. இந்த ஒழுங்குமுறை ஒதுக்கீடு, நியாயமான, நிலையான மற்றும் நீண்டகாலத்துக்கு உகந்த வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு உருவாக்க உதவுகிறது. சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அன்றாட நிகழ்வு. இது, ஒரே ஒரு போர்ட்போலியோவில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை சில சமயம் நிலைகுலைய செய்துவிடுகிறது.
  • முதலீட்டாளர்களுக்கு ஒரே ஒரு சொத்து வகுப்பின் மீதுள்ள அதிக ஈடுபாடும், ஒரு சார்பு நிலையும் இந்த அபாயத்துக்கான காரணத்தின் பின்னணியில் உள்ளன. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொத்து வகைகளில் முதலீடு செய்தவன் மூலம் இதுபோன்ற அபாயங்களை முதலீட்டாளர்கள் நீர்த்துப் போகச் செய்ய முடியும்.
  • பங்குகள், தங்கம், கடன்பத்திரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்பான முதலீடுகள் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டவை என்பதுடன் அவை வெவ்வேறு சந்தை சுழற்சிகளில் வெவ்வேறு விதமாக செயல்படக்கூடியவை. எனவே அவற்றின் வெகுமதிகளும், இடர் அபாயங்களின் விகிதங்களும் மாறுபாடானவை.
  • இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில் சொத்து ஒதுக்கீட்டு அணுகுமுறையை பின்பற்றுவது அவற்றின் செயல்திறனை சமநிலைப்படுத்த உதவுகிறது. ஒருவருக்கு பங்குகளின் மதிப்பு அதிகரிக்கும்போது, கடன்பத்திர முதலீடு நிலையானதாகவும், தங்கத்தில் சொத்து ஒதுக்கீடு பணவீக்கத்தை எதிர்கொள்ளவும் உதவுகிறது. ரியஸ் எஸ்டேட் போர்ட்போலியோவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு முதலீட்டாளர்களின் வருமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது.
  • இருப்பினும், இந்த போர்ட்போலியோக்களில் சொத்து ஒதுக்கீட்டுக்கான விதிகங்களை பின்பற்றுவது மற்றும் சந்தை நிலமைக்கு ஏற்ப கண்காணித்து சரியான நேரத்தில் முதலீடு செய்வது தொடர்பாக சரியான முடிவை எடுப்பது என்பது பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளது.
  • இங்குதான் டைனமிக் அசெட் அலோகேஷன் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் மற்றும் தொழில்முறை மேலாண்மைக்கான உடனடி தேவை முதலீட்டாளர்களுக்கு அத்தியாவசியமாகிறது. நிச்சயமற்ற சூழலில், சுமுகமான முதலீட்டு அனுபவத்துடன் சவாரி செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு வெவ்வேறு சொத்து வகுப்புகளுக்கு பொருத்தமான மற்றும் விகிதாச்சார ஒதுக்கீட்டு திட்டம் மிகவும் விருப்பமான தேர்வாக உள்ளது.
  • அத்தகைய நிதி திட்டங்களில் ஒன்றுதான் ஐசிஐசிஐ புருடென்ஷியல் அசெட் அலோகேட்டர் பண்ட். இது, பங்குகள், கடன்பத்திரம், தங்கம் இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்யும் திட்டம் ஆகும். இந்த திட்டம் முதலீட்டை சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்து வருகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்