பாரத ஸ்டேட் வங்கி (SBI) 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஃபார்மோசா பத்திரங்களை வெளியிட்டதோடு இந்தியா INX GIFT IFSC என்ற நிறுவனத்தின் மூலம் இதை வெளியிடுவதாகவும் பட்டியலிட்டுள்ளது.
தைவானில் வழங்கப்பட்ட ஃபார்மோசா பத்திரம் மூலம் பணம் திரட்டும் முதல் இந்திய கடன் வழங்கும் நிறுவனம் இதுவாகும்.
இரண்டு பங்குச் சந்தைகளும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லக்சம்பர்க் பங்குச் சந்தையில் பசுமைப் பத்திரங்கள் இருமுறை பட்டியலிடப்பட்ட முதல் கடன் வழங்குநர் நிறுவனம் பாரத் ஸ்டேட் வங்கி ஆகும்.