TNPSC Thervupettagam

ஃபாஸ்டேக் (FASTag) பாதைகள்

July 29 , 2019 2204 days 775 0
  • தடையற்றப் போக்குவரத்தை உறுதி செய்வதற்கும், சுங்கச் சாவடிகளில் நெரிசலைத் தடுப்பதற்கும் தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கச் சாவடிகளில் உள்ள அனைத்துப் பாதைகளையும். டிசம்பர் 01 முதல் ஃபாஸ்டேக் பாதைகளாக அறிவிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • எனினும், ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் அதிக அளவுடைய அல்லது பெரிய அளவுடைய வாகனங்களுக்கு ஏற்ற வசதிகளைச் செய்யவும் கண்காணிக்கவும் ஃபாஸ்டேக் மற்றும் இதர முறை கட்டண முறைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கலப்புப் பாதை அனுமதிக்கப்படும்.
  • டிசம்பர் 01-க்குப் பிறகு, ஃபாஸ்டேக் வசதியைக் கொண்டிராத பயனர்கள் ஃபாஸ்டேக் முறையில் மட்டுமே வசூலிக்கப்படும் பாதைகள் வழியே சென்றால் அவர்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
  • ஃபாஸ்டேக் என்பது முன்னரே பணம் செலுத்தி ஒரு அட்டையைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் ஒவ்வொரு முறையும் தானியங்கி முறையில் சுங்கக் கட்டணத்தைக் கழித்து கொள்ளும் ஒரு அடையாள அட்டை ஆகும். இது பணப் பரிவர்த்தனைகளுக்காக சுங்கச் சாவடியில் வாகனங்களை நிறுத்தாமல் செல்ல அனுமதிக்கிறது.  

Image result for fastag

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்