TNPSC Thervupettagam

ஃபிட் இந்தியப் பள்ளி - உடற்தகுதி அடிப்படையில் பள்ளிகள் தரவரிசை

December 6 , 2019 2055 days 630 0
  • ஃபிட் (உடற்தகுதி) இந்தியப் பள்ளிகள் என்ற ஒரு புதிய முன்னெடுப்பானது தொடங்கப் பட்டுள்ளது.
  • இது பின்வருவனவற்றின் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளின் தர நிர்ணய/தரவரிசைப் படுத்தும் ஒரு முறையாகும்.
    • பள்ளியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உடற்தகுதியை வளர்ப்பதற்கு அப்பள்ளியினால் வழங்கப்படும் முக்கியத்துவம்.
    • உடற்பயிற்சிக்காக அப்பள்ளியில் இருக்கின்ற வசதிகள்.
  • ஃபிட் இந்தியப் பள்ளித் தரவரிசையானது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது - முதல் நிலைத் தரவரிசை கொண்ட ஃபிட் இந்தியப் பள்ளிகள், ஃபிட் இந்தியப் பள்ளி (3 நட்சத்தித் தரவரிசை) மற்றும் ஃபிட் இந்தியப் பள்ளி (5 நட்சத்திரத் தரவரிசை).
  • இந்தத் தரவரிசையை அடையும் பள்ளிகள் அதிகாரப்பூர்வ ஃபிட் இந்திய இலச்சினை மற்றும் அதன் கொடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்