சமீபத்தில், இந்திய ஆராய்ச்சியாளர்கள் Tl₂AgI₃ இல் ஒரு அரிய துகள் நிலையிலிருந்து நிகழும்அலை போன்ற ஃபோனான் வெப்பப் பரிமாற்றப் பொறிமுறையைக் கண்டு பிடித்தனர்.
Tl₂AgI₃ என்பது தாலியம் (Tl), வெள்ளி (Ag) மற்றும் அயோடின் (I) ஆகியவற்றால் ஆன பரிமாணமற்ற கனிம உலோக ஹாலைடு படிகமாகும்.
இது ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.
பாலிங்கின் மூன்றாவது விதியால் இயக்கப்படும் எதிரயனிகளின் விலக்கல் காரணமாக, கட்டமைப்பு சிதைந்து ஃபோனான்களைப் பிடிக்கிறது.
இந்தப் பொருள் மிகக் குறைந்த வெப்ப கடத்துத்திறனை வெளிக் காட்டுகிறது என்பதோடு இது வெப்ப மின்கடத்திகள் மற்றும் வெப்ப மின் பொருட்களில் பயன்படுத்தப் படலாம்.