ஃபோர்ப்ஸ் இதழின் இந்தியத் தலைமைத்துவ விருதுகள் (FILA) 2025
March 7 , 2025 266 days 277 0
வழக்கமான வணிகத் துறைக்கு அப்பாற்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பங்களிப்புகளை நன்கு அங்கீகரிக்கும் விதமாக ஃபோர்ப்ஸ் இதழின் 2025 ஆம் ஆண்டு இந்தியத் தலைமைத்துவ விருதுகள் ஆனது வழங்கப்பட்டது.
ரித்தேஷ் அரோரா மற்றும் நகுல் அகர்வால் ஆகியோர் தலைமையிலான பிரவுசர் ஸ்டாக் என்ற நிறுவனம் ஆண்டின் சிறந்தப் புத்தொழில் நிறுவனமாக தேர்ந்தெடுக்கப் பட்டது.
ஐகான்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது ஆனது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அஜய் சிங் மற்றும் கே பியூட்டி நிறுவனத்தின் கத்ரீனா கைஃப் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
உயிரித் தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புகளுக்காக பக்வொர்க்ஸ் ரிசர்ச் நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டது.
ஜெய் ஷாவிற்கு (ICC) சிறந்த தலைவர் விருது வழங்கப்பட்டது.
ராஜேஷ் ஜெஜுரிக்கர் (மஹிந்திரா & மஹிந்திரா) ஆண்டின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.