ஃபோர்ப்ஸ் இதழின் சுய உழைப்பில் முன்னேறிய 100 பணக்காரப் பெண்களின் பட்டியல்
July 15 , 2023 750 days 412 0
ஜெய்ஸ்ரீ உல்லால் மற்றும் இந்திரா நூயி உட்பட நான்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள், ஃபோர்ப்ஸ் இதழின் அமெரிக்காவின் மிகவும் வெற்றிகரமான சுய உழைப்பில் முன்னேறிய 100 பெண்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
கணினி வலையமைப்புச் சேவை நிறுவனமான அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெயஸ்ரீ உல்லால், இந்தப் பட்டியலில் 15வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
சின்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் நீரஜா செத்தி இந்தப் பட்டியலில் 25வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
கன்ஃப்ளூயண்ட் எனப்படுகின்ற மேகக் கணிமை நிறுவனத்தின் இணை நிறுவனர் நர்கேஹே, இப்பட்டியலில் 50வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயி ஃபோர்ப்ஸ் பட்டியலில் 77வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
இதில் கட்டிடப் பொருட்கள் விநியோக நிறுவனத்தின் நிறுவனர் டயான் ஹென்ட்ரிக்ஸ் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.