ஃபோர்ப்ஸ் இதழின் 30 வயதிற்குட்பட்ட 30 முன்னணி சாதனையாளர்கள் பட்டியல் 2025
February 21 , 2025 147 days 222 0
இது புதிய செயற்கை நுண்ணறிவுப் பிரிவு உட்பட 19 பல்வேறு பிரிவுகளில் சாதனைப் படைத்த 30 வயதிற்குட்பட்ட 42 இளம் சாதனையாளர்களைப் பட்டியலிடுகிறது.
இந்த ஆண்டு 11 பெண்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தேசிய விருது பெற்ற நடிகையான அபர்ணா பாலமுரளி இந்தியத் திரைத் துறைக்கு ஆற்றியப் பங்களிப்புகளுக்காக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
தேவன் சந்திரசேகரன் (18), இப்பட்டியலில் இடம் பெற்ற இளம் நபராவார்.
2024 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பாரிசு நகர ஒலிம்பிக் போட்டியில், 2 வெண்கலம் வென்ற மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனையான ப்ரீத்தி பால் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.