ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் 100 முன்னணி மேகக் கணிமை நிறுவனங்களின் பட்டியல்
August 19 , 2022 1176 days 616 0
இந்தியாவின் முன்னணிப் பண வழங்கீட்டு மற்றும் வணிக வங்கித் தளமான ரேசர்பே, 2022 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் 100 முன்னணி மேகக் கணிமை நிறுவனங்களின் பட்டியலில் பெயரிடப்பட்ட முதல் இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.
ரேசர்பே இரண்டாவது முறையாக இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இது நிதித் தீர்வுகளுக்கான ஒரு மென்பொருளாக 49வது இடத்தில் பட்டியலிடப் பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ரேசர்பே இந்தப் பட்டியலில் 57வது இடத்தில் இருந்தது.
100 முன்னணி மேகக் கணிமை நிறுவனங்களின் பட்டியல், தொழில்நுட்பப் பிரிவில் உள்ள சிறியப் புத்தொழில் நிறுவனங்கள் முதல் தனியார் நிறுவங்களின் பங்குகள் மூலமாக ஆதரவு பெற்ற பெரிய நிறுவனங்கள் வரையிலான சிறந்த நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தி அங்கீகரிக்கிறது.