ஃபோர்ப்ஸ்-ன் உலகின் சிறந்த 2000 வேலையளிப்போர் பட்டியல்
October 24 , 2018 2482 days 820 0
பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் & ட்யூப்ரோ (L&T) ஆனது ஃபோர்ப்ஸின் சிறந்த 2000 வேலையளிப்போர் பட்டியலின் முதல் 25 நிறுவனங்களில் 22 வது இடத்தைப் பிடித்துள்ளது.
பட்டியலின் முதல் 25 இடங்களுள் இடம் பிடித்த ஒரே இந்திய நிறுவனம் இதுவேயாகும்.
தொடர்ந்து இரண்டாவது வருடமாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் முதலிடத்தையும் அதனைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் ஆகியவையும் இடம் பிடித்துள்ளன.
முதல் 10 இடங்களில் ஜெர்மன் நிறுவனங்கள் இரண்டாவது அதிகபட்ச இடங்களைப் பிடித்துள்ளன.
L&T நிறுவனத்தைத் தவிர இந்த பட்டியலின் முதல் 100 இடங்களில் மஹிந்திரா & மஹிந்திரா (55), கிராசிம் இன்டஸ்ட்ரீஸ் (59) மற்றும் எச்டிஎப்சி (91) ஆகிய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.