அமெரிக்கா ஹார்முஸ் நீர்ச்சந்தியில் ஃப்ரீடம் திட்டம் என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லவும், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தைச் சீரமைக்கவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
ஹார்முஸ் நீர்ச்சந்தியானது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரபிக் கடலுடன் இணைக்கிறது என்பதோடு இது ஒரு முக்கியமான உலகளாவிய எண்ணெய் வர்த்தகப் பாதையாகும்.
இந்த நடவடிக்கையில் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவில், எறிகணை அழிப்புக் கப்பல்கள் மற்றும் 15,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று ஈரான் இந்த நீர்ச்சந்தியை அடைத்தது.
இதற்குப் பதிலடியாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா கடற்படை முற்றுகை விதித்தது.
'கடல்சார் சுதந்திரக் கட்டமைப்பு' என்பது அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் போர் அமைச்சகம் சம்பந்தப்பட்ட ஒரு புதிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு முயற்சி ஆகும்.