அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்தின் உலகப் போக்குகள் அறிக்கை
June 21 , 2022
1132 days
614
- அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையமானது, "2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர உலகப் போக்குகள் அறிக்கையை" சமீபத்தில் வெளியிட்டது .
சிறப்பம்சங்கள்
- உக்ரைனில் நடைபெற்ற வன்முறை மற்றும் போர் காரணமாக 2021 ஆம் ஆண்டில் 100 மில்லியன் மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- பேரழிவுகள் காரணமாக உலகம் முழுவதும் 23.7 மில்லியன் புதிய உள்நாட்டு இடப் பெயர்வுகள் ஏற்பட்டன.
- இது கடந்த ஆண்டை விட ஏழு மில்லியன் அல்லது 23 சதவீதம் குறைந்துள்ளது.
- பூமியில் வாழும் ஒவ்வொரு 78 நபர்களுள் ஒருவர் தற்போது இடம் பெயர்ந்துள்ளனர்.
- பேரழிவுகள் காரணமாக 2021 ஆம் ஆண்டில் சீனாவில் 6 மில்லியன் அளவிலான மிகப் பெரிய இடப் பெயர்வு ஏற்பட்டது.
- இதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் (5.7 மில்லியன்) மற்றும் இந்தியா (4.9 மில்லியன்) ஆகிய நாடுகள் உள்ளன.
- இந்தியாவில், 2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவுகள் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக சுமார் ஐந்து மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர்.

Post Views:
614