அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் நான்சென் அகதிகள் விருது
October 5 , 2019 2121 days 890 0
தனது சொந்த நாடான கிர்கிஸ்தானில் அகதிகள் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர உதவிய மனித உரிமை வழக்கறிஞரான அசிஸ்பெக் அஷுரோவ் என்பவர் இந்த ஆண்டின் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் நான்சென் அகதிகள் விருதினை வென்றுள்ளார்.
அவரும் அவரது அமைப்பான ஃபெர்கானா பள்ளத்தாக்கு எல்லைகளைக் கடந்த வழக்குரைஞர்கள் என்ற அமைப்பும் 10,000க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு கிர்கிஸ்தான் குடியுரிமையைப் பெற உதவியுள்ளன.
அகதிகள் விவகாரத்தை ஒழித்த உலகின் முதலாவது நாடு கிர்கிஸ்தான் ஆகும்.
இந்த விருதுபற்றி
விஞ்ஞானி, துருவ ஆய்வாளர் மற்றும் அகதிகளுக்கான முதல் உயர் ஆணையரான ஃப்ரிட்ஜோஃப் நான்சனின் நினைவாக இந்த விருதுக்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
அகதிகள், இடம் பெயர்ந்தவர்கள் அல்லது நாடற்ற மக்கள் ஆகியோருக்கான சிறந்த சேவையை அளிப்பதை அங்கீகரிப்பதற்காக ஒரு தனிநபர், குழு அல்லது அமைப்புக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.