கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அகத்தியமலை உயிர்க்கோளக் காப்பகத்தில் (ABR) 3,261 பூக்கும் தாவர இனங்களை ஒரு புதிய பட்டியல் பதிவு செய்துள்ளது.
ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JNTBGRI) 190 குடும்பங்களைச் சேர்ந்த 3,261 சிற்றினங்கள், 26 துணைச் சிற்றினங்கள் மற்றும் 28 வகைகளைப் பதிவு செய்துள்ளது.
பேபேசி (Fabaceae) 349 வகைகளுடன் மிகவும் வளமான குடும்பமாக உள்ளது, இதைத் தொடர்ந்து ரூபியேசி (194), போயேசி (193) மற்றும் ஆர்க்கிடேசி (168) ஆகியவை உள்ளன.
சுமார் 1,018 வகைகள் (31.2%) இந்தியாவுக்கே உரிய தாவரங்களாகும், இதில் 245 சிறப்பு வாழ்விடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.
ABR 347 தாவர வகைகளை இலங்கையுடன் பகிர்ந்து கொள்கிறது மற்றும் வெப்பமண்டல அமெரிக்க தாவரங்களுடன் இணைக்கப்பட்ட 102 வகைகளைக் கொண்டுள்ளது.