அகழ்வாராய்ச்சித் தளத்திலேயே அருங்காட்சியகம் - ஆதிச்சநல்லூர்
February 5 , 2020 2145 days 900 0
அகழ்வாராய்ச்சித் தளத்திலேயே அருங்காட்சியகம் அமைக்கப்பட இருக்கும் ஐந்து தொல்பொருள் ஆராய்ச்சித் தளங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் தளமும் ஒன்றாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிற தொல்பொருள் தளங்கள்
ராக்கிஹார்கி (ஹரியானா),
ஹஸ்தினாபூர் (உத்தரப் பிரதேசம்),
சிவசாகர் (அசாம்) மற்றும்
தோலவீரா (குஜராத்).
தொலைதூரக் கிராமமான ஆதிச்சநல்லூரில் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மூன்று அடுக்கு கல்லறை உள்ளது.
இது தெற்காசியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய மற்றும் மிகப் பழமையான முந்தைய இரும்புக் காலக் கல்லறைகளில் ஒன்றாக விளங்குகின்றது.
2004-06 ஆம் ஆண்டில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 85 மனித எலும்புக் கூடுகள் காணப் பட்டன.