ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CCMB - Centre for Cellular and Molecular Biology) மற்றும் தேசிய இறைச்சி ஆராய்ச்சி மையம் (NRCM - National Research Centre on Meat) ஆகியவை இணைந்து “அகிம்சா இறைச்சியை” உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.
இந்தியாவின் முதலாவது ஆய்வக இறைச்சித் திட்டம் இதுவாகும்.
ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளின் வளர்ப்பு இல்லாமலேயே குருத்தணுக்களிலிருந்து இறைச்சி மற்றும் கோழிக் கறியை உருவாக்கவிருக்கின்றனர்.
கொழுப்பு இல்லாத எலும்பற்ற இறைச்சியை உருவாக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கும் உலக நாடுகள் சிலவற்றில் இந்தியாவும் ஒன்றாகும்.