அகில இந்தியக் குடிமை தற்காப்பு மற்றும் ஊர்க்காவல் படை தினம் - டிசம்பர் 06
December 10 , 2024 220 days 171 0
1946 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் தேதியன்று பழைய பம்பாய் மாகாணத்தில் ஊர்க் காவல் படை உருவாக்கப்பட்டது.
இது குடிமைசார் கலவரம் மற்றும் வகுப்புவாத கலவரங்களைக் கட்டுப்படுத்தச் செய்வதற்காக காவல்துறைக்கு உதவும் ஒரு தன்னார்வப் படையாகும்.
1962 ஆம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, மத்திய அரசானது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை ஏற்கனவே உள்ள தன்னார்வ அமைப்புகளை ஒரே சீரான தன்னார்வப் படையாக இணைக்க அறிவுறுத்தியது.
ஊர்க்காவல் படையானது, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் ஊர்க் காவல் படை சட்டம் மற்றும் விதிகளின் கீழ் உருவாக்கப்படுகின்றன.
நாட்டில் உள்ள மொத்த ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கை 5,73,793 ஆக உள்ளது, அதன் அதிகரிக்கப்பட்ட எண்ணிக்கை 4,86,401 ஆக உள்ளது.
இந்த அமைப்பு ஆனது கேரளாவைத் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் உள்ளது.