தெலங்கானாவில் உள்ள அமராபாத் புலிகள் காப்பகத்தில் (ATR) புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அகில இந்தியப் புலிகள் மதிப்பீடு (AITE) 2026-இன் முதற்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் புலிகள் கணக்கெடுப்பான AITE ஆனது தடயங்கள், புகைப்படக் கருவிப் பொறிகள் மற்றும் மரபணு (DNA) மாதிரிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது.
ATR முந்தைய கணக்கெடுப்பில் புலிகளின் பதிவு 36 ஆக இருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 42புலிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது புலிகளின் வலுவான இருப்பைக் காட்டுகிறது.
வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இன் கீழ் அட்டவணை I-இல் இடம்பெற்றுள்ள இந்திய சாம்பல் ஓநாயும் இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய அகில இந்தியப் புலிகள் மதிப்பீட்டின்படி (2022), இந்தியாவில் 3,682 காட்டுப் புலிகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது; இது உலகளாவிய காட்டுப் புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 75% ஆகும்.