அகில இந்தியப் புலிகள் மதிப்பீட்டின் (2018) நான்காவது சுழற்சி
July 13 , 2020 1834 days 644 0
இது உலகின் மிகப்பெரிய புகைப்பட வழியிலான வனவிலங்கு கணக்கெடுப்பு என்ற கின்னஸ் உலக சாதனையில் நுழைந்து ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த அகில இந்தியப் புலிகள் மதிப்பீட்டை இந்திய வனவிலங்குப் பயிற்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் இயக்கப் படுகின்றது.
இந்தியாவில் 2,967 புலிகள் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது, அதில் 2461 புலிகள் புகைப்படம் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
உலக உள்ள புலிகள் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு கிட்டத்தட்ட 75% ஆகும்.
புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான தனது தீர்மானத்தைத் தனது இலக்கு ஆண்டான 2022க்கு முன்பே இந்தியா நிறைவேற்றியுள்ளது.
2010 ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.