TNPSC Thervupettagam

அகில இந்திய சபாநாயகர் மாநாடு 2026 – உத்தரப் பிரதேசம்

January 25 , 2026 2 days 35 0
  • 86வது அகில இந்திய சபாநாயகர் மாநாடு (AIPOC) லக்னோவில் நடைபெற்றது.
  • இந்த மாநாடு பாராளுமன்றம் மற்றும் அனைத்து மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச சட்டமன்றங்களின் சபாநாயகர்களுக்கான உயர் நிலை தேசிய மன்றமாகும்.
  • இது சட்டமன்றச் செயல்திறன், பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் விவாத தரத்தை மேம்படுத்துவதையும், பாராளுமன்றம் மற்றும் மாநிலச் சட்ட மன்றங்களிடையே சிறந்த நடைமுறைகளை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 24 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இருந்து சுமார் 36 சபாநாயகர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்ட மாநாடு இன்று வரை மிகப்பெரிய AIPOC ஆக அமைகிறது.
  • மாநிலச் சட்டமன்றங்களில் ஆண்டுக்கு குறைந்தது 30 அமர்வுகளை உறுதி செய்தல் மற்றும் சட்டமன்றச் செயல்திறனை ஒப்பிட்டு மேம்படுத்த தேசிய சட்டமன்றக் குறியீட்டை உருவாக்குதல் உள்ளிட்ட ஆறு முக்கியத் தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப் பட்டன.
  • இது "Strong LegislatureProsperous Nation" என்ற கருத்துருவில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்