அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது
August 6 , 2017 2890 days 1302 0
அகில இந்திய அளவில் கடந்த நான்கு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த புலிகள் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு 4 ஆவது இடம்: 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, புலிகளின் எண்ணிக்கையில் தமிழகத்துக்கு நான்காவது இடம் கிடைத்தது. தமிழகத்தில் மொத்தம் 229 புலிகள் உள்ளதாக தெரிய வந்தது.
தமிழகத்தில் களக்காடு - முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் பாதுகாப்பு சரணாலயங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழக வனத்துறையின் கணக்கெடுப்புப்படி சத்தியமங்கலத்தில் 64 புலிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் முதுமலையில் 43-க்கும் அதிகமான புலிகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உயிரிழப்புகள்: தமிழகத்தில் 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரை மொத்தம் 24 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசியப் புலிகள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் புலிகள் இறந்துள்ளன.
தமிழகத்தில் மட்டும் 15 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. அதேநேரத்தில், கடந்தாண்டில் (2015) தமிழகத்தில் 6 புலிகள் மட்டுமே உயிரிழந்துள்ளன. 2016 இல் மூன்று புலிகள் உயிரிழந்துள்ளன.