TNPSC Thervupettagam

அக்னி வீரர்களுக்கு 10 சதவிகித ஒதுக்கீடு

June 20 , 2022 1123 days 485 0
  • மத்திய ஆயுதக் காவற்படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவு ஆகியவற்றிற்கான ஆட்சேர்ப்புகளில் அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • 17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட மத்திய ஆயுதக் காவற்படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவுகளில் உள்ள அக்னி வீரர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையில் வயது வரம்பில் தளர்வு வழங்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • ஆட்சேர்ப்பின் ஆரம்ப வகுப்பினருக்கு விதிக்கப் பட்டுள்ள அதிகபட்ச வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் நீட்டிப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.
  • மத்திய அரசானது, இத்திட்டத்திற்கான அதிகபட்ச வயது வரம்பை ஒருமுறையிலான வாய்ப்பாக 21 என்ற வயதிலிருந்து 23 ஆக உயர்த்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்