அசாமின் கௌஹாத்தியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தினை (IIM) நிறுவுவதற்காக, 2025 ஆம் ஆண்டு இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (திருத்தம்) மசோதாவை பாராளுமன்றம் நிறைவேற்றியது.
மாநிலங்களவையினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதா 2017 ஆம் ஆண்டு இந்திய மேலாண்மை நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்களைச் செய்கிறது.
கௌஹாத்தியில் நிறுவப்பட உள்ள புதிய IIM 2025-26 ஆம் கல்வியாண்டில் கல்லூரிச் சேர்க்கையைத் தொடங்கும்.
இந்த மசோதா கௌஹாத்தியில் உள்ள IIM நிறுவனத்திற்கு 555 கோடி ரூபாய் அளவிலான மூலதன நிதியை வழங்குகிறது.
இதன் மூலம், இந்தியாவில் உள்ள மொத்த IIM நிறுவனங்களின் எண்ணிக்கை 22 ஆக இருக்கும்.