2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, அசாமில் 3,260 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன, இது உலகளாவிய எண்ணிக்கையில் சுமார் 80% ஆகும்.
பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் (ரைனோசரஸ் யூனிகார்னிஸ்) IUCN செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய (Vulnerable) இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.
காசிரங்கா தேசியப் பூங்கா 2,600 க்கும் மேற்பட்ட காண்டாமிருகங்களுக்கு தங்குமிடம் அளிக்கிறது மற்றும் இது இந்த இனத்தின் மிகப்பெரிய கோட்டையாகும்.
அசாமில் 2025 ஆம் ஆண்டில் காண்டாமிருக வேட்டையாடல் சம்பவங்கள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை, 2016 ஆம் ஆண்டு முதல் வேட்டையாடுதல் 86% குறைந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இனம் வண்டல் புல்வெளிகள், ஈரநிலங்கள் மற்றும் நதிக்கரை காடுகளைச் சார்ந்துள்ளது மற்றும் இது அசாமின் மாநில விலங்காகும்.
இது முக்கியமாக இந்தியா மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது மற்றும் ஜாவன் மற்றும் சுமத்ரான் காண்டாமிருகங்களுடன் இணைந்து இது ஆசியாவின் மூன்று காண்டாமிருக இனங்களில் ஒன்றாகும்.