ஆறு சமூகங்களுக்கு பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்தைப் பரிந்துரைக்கும் அறிக்கையை அசாம் அமைச்சரவை அங்கீகரித்தது.
அந்தச் சமூகங்களாவன ; தாய் அஹோம்ஸ், டீ பழங்குடியினர் (ஆதிவாசிகள்), மோரன், மடக் (மோடோக்), சுடியா மற்றும் கோச்‑ராஜ்போங்ஷி ஆகியோர் ஆவர்.
இந்தச் சமூகங்கள் தற்போது அசாமின் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையானது மேற்கொண்டு நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.
ST அந்தஸ்து வழங்குவது கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதையும் இந்தக் குழுக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நன்மைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரிவு 366 (25), அரசியலமைப்பின் நோக்கங்களுக்காக பிரிவு 342ன் கீழ் பட்டியலிடப் பட்ட பழங்குடியினராகக் கருதப்படும் சமூகங்களை STகளாக வரையறுக்கிறது.
பிரிவு 342 பிரிவு (1) - ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் ST பிரிவுகளாகக் கருதப்பட வேண்டிய சமூகங்களைக் குறிப்பிட இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
பிரிவு 342 பிரிவு (2) - இது ஒரு நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் எந்தவொரு சமூகத்தையும் ST பட்டியலில் சேர்க்க அல்லது விலக்க நாடாளுமன்றத்திற்கு பிரத்தியேக அதிகாரத்தை வழங்குகிறது என்பதோடு நாடாளுமன்றம் இதற்கான ஒரு சட்டத்தை இயற்றியவுடன், குடியரசுத் தலைவரின் அந்த உத்தரவை அடுத்தடுத்த ஒரு அறிவிப்பின் மூலம் மாற்ற முடியாது.