TNPSC Thervupettagam

அசாம் மாநிலத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம்

January 3 , 2023 958 days 455 0
  • இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஆனது, அசாம் மாநிலத்தின் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயச் செயல்முறையை சமீபத்தில் தொடங்கியது.
  • அசாம் மாநிலத்தில் கடைசியாக 1976 ஆம் ஆண்டில் தான் எல்லை நிர்ணயம் மேற் கொள்ளப்பட்டது.
  • தற்போதைய எல்லை நிர்ணயமானது, 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப் படுகிறது.
  • எல்லை நிர்ணயம் என்பது மாறிவரும் மக்கள்தொகை எண்ணிக்கையை உள்ளடக்கும் வகையில் மாநிலச் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவடிவமைக்கும் ஒரு செயல்முறையாகும்.
  • மக்கள்தொகையின் அனைத்துப் பிரிவினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப் படுவதை உறுதி செய்வதே எல்லை நிர்ணய நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
  • மக்கள் தொகை ஒரே சீரான முறையில் அதிகரிக்காது என்பதால், எல்லை நிர்ணயம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பதிவான மக்கள்தொகைப் பங்கீட்டில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது.
  • எல்லை நிர்ணய ஆணைக்குழு என்பது எல்லை நிர்ணய நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள ஒரு சுயாதீன ஆணையக் குழு ஆகும்.
  • இது எல்லை நிர்ணய ஆணையச் சட்டத்தின் கீழ் மத்திய அரசினால் அமைக்கப் பட்டுள்ளது.
  • இந்த ஆணையமானது, இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் (ECI) இணைந்து எல்லை நிர்ணய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
  • உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் அந்தந்த மாநிலங்களின் மாநிலத் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.
  • அரசியலமைப்பின் 82வது சட்டப் பிரிவானது, இந்திய நாடாளுமன்றம் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் ஒரு எல்லை நிர்ணயச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறுகிறது.
  • இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததும், உடனே எல்லை நிர்ணய ஆணையத்தினை மத்திய அரசானது அமைக்க வேண்டும்.
  • இது நாள் வரையில் (1952, 1963, 1973 மற்றும் 2002) மொத்தம் 4 எல்லை நிர்ணய ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • 2002 ஆம் ஆண்டு சட்டமானது மக்களவைக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கையில் அல்லது பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான பங்கீடுகளில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.
  • இச்சட்டம் அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களை எல்லை நிர்ணய நடவடிக்கையில் இருந்து ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை ஒதுக்கி வைத்தது.
  • இந்திய அரசாங்கமானது, இந்த 4 மாநிலங்களுக்கும், ஜம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்திற்குமான எல்லை நிர்ணய ஆணையத்தினை 2020 ஆம் ஆண்டில் மறு சீரமைத்தது.
  • மக்களவையின் மாநில வாரியான கூட்டமைவினை மாற்றிய முந்தைய எல்லை நிர்ணய நடவடிக்கையானது 1976 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • இது 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்தப் பட்டது.
  • அண்மைக் காலமாக எல்லை நிர்ணய நடவடிக்கைகள் அடிக்கடி நடத்தப் படுவது இல்லை.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கையானது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதே இதற்குக் காரணமாகும்.
  • இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக 1976 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு எல்லை நிர்ணய நடவடிக்கையானது 2001 ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
  • 2026 ஆம் ஆண்டு வரை எல்லை நிர்ணய நடவடிக்கையை மேலும் தாமதப் படுத்தச் செய்வதற்காக மற்றொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்