அசாம் மாநில உள்நாட்டு நீர்ப் போக்குவரத்துத் திட்டம்
January 17 , 2020 2124 days 794 0
அசாம் மாநில அரசு, இந்திய அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை இணைந்து உள்நாட்டு நீர்ப் போக்குவரத்துத் திட்டம் தொடர்பான 88 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தமானது பிரம்மபுத்ரா ஆற்றில் அசாமின் படகுப் போக்குவரத்துச் சேவையை நவீன மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்நாட்டு நீர்வழிகள்
அசாம் மாநிலத்தில் சுமார் 15 நீர்வழித் தடங்கள் இயங்கி வருகின்றன.
அவை பராக், பெக்கி, லோஹித், டோயாங், கோபிலி, சுபன்சிரி, ஆயி, திஹிங், டிக்கிஹோ, புதிமாரி, கங்காதர், ஜின்ஜிராம் மற்றும் திவாங் போன்ற நதிகளில் இயக்கப் படுகின்றன.