TNPSC Thervupettagam

அசாம் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் திருத்தம்

November 21 , 2025 16 hrs 0 min 14 0
  • இந்தியத் தேர்தல் ஆணையம் ஆனது அசாமில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் திருத்தத்தினை மேற்கொள்ள உத்தரவிட்டது.
  • மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நிலை இன்னும் நிலுவையில் உள்ளதனால், இந்த நடவடிக்கை சிறப்புத் தீவிர திருத்தத்திலிருந்து வேறுபட்டது.
  • 2019 ஆம் ஆண்டு தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் 3.3 கோடி பேரில் 19.6 லட்சம் விண்ணப்ப தாரர்கள் சேர்க்கப்படவில்லை என்பதோடு மேலும் இறுதி அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
  • வாக்காளர்கள், கணக்கெடுப்பு படிவங்களை நிரப்ப வேண்டிய அவசியமின்றி, வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் மூன்று அறிக்கைகளைப் பயன்படுத்தி வீடு வீடாகச் சரிபார்ப்பை மேற்கொள்வார்கள்.
  • வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் இது மாற்றி அமைக்கப் படாவிட்டால், D வாக்காளர்களின் (சந்தேக வாக்காளர்கள்) விவரங்கள் மாறாமல் இருக்கும்.
  • இந்தச் சரிபார்ப்பு நவம்பர் 22 முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்பதோடு இதன் வரைவு பட்டியல் டிசம்பர் 27 ஆம் தேதியன்றும், இறுதிப் பட்டியல் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதியன்றும் வெளியிடப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்