இந்திய விமானப்படை குழுத்தலைவர் மற்றும் விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லாவுக்கு, 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இந்தியாவின் மிக உயரிய அமைதிக் கால வீரதீர விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான (ISS) ஆக்சியம் திட்டம் 4 பயணத்தின் போது அவர் வெளிப்படுத்திய வீரம் மற்றும் துணிச்சலைப் பாராட்டி இந்த விருது வழங்கப் பட்டது.
சுக்லா முதன்மைப் பணி விமானியாகப் பணியாற்றி, முக்கியமான சுற்றுப்பாதை செயல்பாடுகளின் போது பாதுகாப்பையும் அதன் வெற்றியையும் உறுதி செய்தார்.
1984-ல் ராகேஷ் சர்மாவின் விண்வெளி பயணத்திற்குப் பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார் என்பதோடு இது மனிதர்களை உள்ளடக்கிய விண்வெளிப் பயணத்தில் இந்தியாவின் மீள்வருகையைக் குறித்தது.
சர்வதேச விண்வெளி வீரர்கள் இடம்பெற்றிருந்த ஆக்சியம்-4 பயணமானது அறிவியல் சோதனைகள், தொழில்நுட்ப விளக்கங்கள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.