அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
July 1 , 2026 2 days 69 0
2002 ஆம் ஆண்டின் உயிரியல் பன்முகத்தன்மை சட்டத்தின் கீழ் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களை அறிவிப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) தேசியப் பல்லுயிர் ஆணையம் (NBA) வெளியிட்டது.
அறிவியல் பூர்வமான மதிப்பீடு, பங்குதாரர்களின் ஆலோசனை, சரிபார்த்தல், அறிவிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டமிடல் ஆகியவற்றிற்கான படிப்படியான செயல் முறையை இந்த SOP வழங்குகிறது.
உயிரினங்களை அடையாளம் காண அறிவியல் சான்றுகள், கள ஆய்வுகள் மற்றும் பாரம்பரிய அறிவைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை இது அறிவுறுத்துகிறது.
பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள், இந்தியத் தாவரவியல் மதிப்பாய்வு மற்றும் இந்திய விலங்கியல் மதிப்பாய்வு ஆகியவை இச்செயல்முறையில் ஈடுபட்டுள்ளன.
இந்தியா முழுவதும் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் காலமுறை மதிப்பாய்வுக்கு இது துணைபுரிகிறது.