2015 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதி அன்று அடல் ஓய்வூதியத் திட்டமானது தொடங்கப் பட்டது.
இது தனது 5 ஆண்டு காலச் செயல்பாடுகளை நிறைவு செய்துள்ளது.
இந்தத் திட்டமானது சுவாலம்பன் என்ற திட்டத்திற்குப் பதிலாக கொண்டு வரப் பட்டுள்ளது.
இது முதியோர்களின் வருமானப் பாதுகாப்பை அளிப்பதற்காகத் தொடங்கப் பட்டதாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமக்களாலும் பதிவு செய்ய முடியும்.
இது 60 வயதை எட்டியவுடன் ரூ. 1000 முதல் ரூ. 5000 வரையிலான குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தை அளிக்கின்றது.
இது மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தினால் (PFRDA - Pension Fund Regulatory and Development Authority) செயல்படுத்தப் படுகின்றது.