TNPSC Thervupettagam

அடல் ஓய்வூதிய யோஜனா நீட்டிப்பு

January 25 , 2026 2 days 37 0
  • அடல் ஓய்வூதிய யோஜனா (APY) திட்டத்தை 2030–31 ஆம் நிதியாண்டு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • APY என்பது தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் வீட்டு உதவியாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கான அரசாங்கத்தால் ஆதரிக்கப் படும் ஓய்வூதியத் திட்டமாகும்.
  • மே 9, 2015 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 60 வயதிற்குப் பிறகு 1,000 முதல் 5,000 ரூபாய் வரை நிலையான மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது.
  • இந்தத் திட்டத்தை நிலையானதாக மாற்ற, விழிப்புணர்வுத் திட்டங்கள், பயிற்சி மற்றும் இடைவெளி ஆதரவு ஆகியவற்றை அரசாங்கம் தொடர்ந்து நிதியளிக்கும்.
  • ஜனவரி 19, 2026 நிலவரப்படி, 8.66 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
  • APY தொழிலாளர்கள் தொடர்ந்து சேமிக்க உதவுவதோடு, முதுமையில் வருமானப் பாதுகாப்பை உறுதி செய்து, நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்