TNPSC Thervupettagam

அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா

August 26 , 2020 1826 days 759 0
  • தொழிலாளர்கள் ஈட்டுறுதிக் காப்பீட்டுக் கழகமானது (ESIC - Employee’s State Insurance Corporation) தனது அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் தகுதி நிலை மற்றும் வேலை வாய்ப்பின்மைப் பயன்களின் பணவழங்கீட்டு மேம்பாடு ஆகியவற்றைத் தளர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இது மாறிவரும் வேலை வாய்ப்புக் கட்டமைப்பின் காரணமாக எந்தவொருக் காரணங்களுக்காகவும் வேலையிழந்த அல்லது வேலைவாய்ப்பற்றவர்களுக்கு நிதி வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தளர்வுகள்

  • பணவழங்கீட்டுத் தளர்வானது சராசரி ஊதியமான 25% என்ற அளவிலிருந்து 50%  ஆக மேம்படுத்தப் பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பின்மைக்குப் பிறகு 90 நாட்களில் கொடுக்கப்படும் நிவாரணத் தொகையானது 30 நாட்களுக்குப் பிறகு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையாக மாறி விடும்.
  • காப்பீடு செய்யப்பட்ட நபர் தனது காப்பீட்டு உரிமையைத் தான் பணியாற்றிய தன்னுடைய கடைசியான முதலாளியினால் அனுப்பப்பட்டு உரிமை கோரப் படுவதற்குப் பதிலாக நேரடியாக ESICயின் கிளை அலுவலகத்திலேயே அந்தக் காப்பீட்டு உரிமையைச் சமர்ப்பிக்க முடியும். பின் அந்த நிதியானது நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்