தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் “அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா” என்ற ஒரு திட்டத்தை மாநிலங்களவையில் அறிவித்தார்.
இந்தத் திட்டம் அரசுத் தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம், 1948ன் கீழ் உள்ளடங்கும் காப்பீடு பெற்ற நபர்களுக்காக அரசு தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தினால் (Employees' State Insurance Corporation - ESIC) செயல்படுத்தப்படும்.
இது தொடக்கத்தில் இரண்டு ஆண்டு காலத்திற்குச் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப் படுகின்றது.
இது மாறி வரும் வேலைவாய்ப்பு நிலைமையின் காரணமாக எந்தவொரு காரணத்திற்காகவும் பணியை இழந்த அல்லது பணியில் இல்லாத நபர்களுக்கு நிதியுதவி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறாத சமயத்தில் இந்த நிவாரணம் காப்பீடு பெற்ற நபர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணமாகச் செலுத்தப்படும்.
அவர்கள் முந்தைய பணியிலிருந்து விலகிய தேதியிலிருந்து குறைந்தது 3 மாதங்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தால், ESIC-ல் அவர்களின் மொத்தப் பங்களிப்பில் 47 சதவிகிதத்தினை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
அது பற்றி
ESI என்பது இந்தியத் தொழிலாளர்களுக்கான சுய நிதி சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமாகும்.
இது இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தினால் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட ஒரு தனிச் சுதந்திர கழகமாகும்.
இது ESI சட்டம், 1948-ல் கூறப்பட்டுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி ESICயினால் நிர்வகிக்கப்படுகின்றது.