TNPSC Thervupettagam

அடிமட்ட அளவிலான பல்லுயிர் திட்டம்

April 29 , 2026 12 hrs 0 min 52 0
  • தமிழ்நாடு மற்றும் மேகாலயாவில் புதிய பல்லுயிர்ப் பாதுகாப்புத் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
  • தேசிய பல்லுயிர் ஆணையத்துடன் இணைந்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தால் (MoEFCC) இத்திட்டம் வழிநடத்தப்படுகிறது.
  • 2025-2030 ஆம் ஆண்டிற்கான 4.88 மில்லியன் டாலர் நிதியுதவியுடன் உலகளாவிய சுற்றுச் சூழல் வசதி (GEF) மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) ஆகியவற்றால் இத்திட்டம் ஆதரிக்கப்படுகிறது.
  • தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலைப் புலிகள் காப்பகம் ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது.
  • மேகாலயாவில், மேற்கு காரோ மலைப்பகுதி மாவட்டத்தில் உள்ள நோக்ரெக் உயிர்க் கோளக் காப்பகத்தை இது உள்ளடக்கியுள்ளது.
  • உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துதல், சமூகப் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் அணுகல் மற்றும் பலன் பகிர்வு (ABS) மற்றும் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) ஆகியவற்றின் மூலமான நிதியுதவிக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்