அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 2023 – டிசம்பர் 02
December 2 , 2023 758 days 377 0
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 02 ஆம் தேதியன்று கொண்டாடப்படும் அடிமைத் தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினமானது, உலகில் இன்றும் நிலவி வரும் அடிமைத் தனம் குறித்த கவனத்தை ஈர்க்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, அடிமைத்தனம் உலகம் முழுவதும் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது.
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் சபையானது தனி நபர்களின் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது மேற்கொள்ளப் படும் அத்துமீறல்கள் ஆகியவற்றை ஒடுக்குவதற்கான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது.
1985 ஆம் ஆண்டில், அடிமைத்தனம் தொடர்பான பணிக்குழுவின் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது டிசம்பர் 02 ஆம் தேதியை அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான உலக தினத்தினை அறிவிக்குமாறு பரிந்துரைத்தது.
1995 ஆம் ஆண்டில், இது உலகம் முழுவதும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக அறியப்பட்டது.
இந்த ஆண்டிற்கான அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தின் கருத்துரு – மாறிவரும் கல்வியின் மூலம் இனவெறியின் அடிமைத்தன மரபினை எதிர்த்துப் போராடுதல் - என்பதாகும்.