அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் கடல் கடந்த அடிமை வர்த்தகத்தால் பாதிக்கப் பட்டோரை நினைவு கூரும் சர்வதேச தினம் 2026 – மார்ச் 25
March 27 , 2026 75 days 94 0
இந்த நாள் 2007 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது (2008 முதல் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது).
வரலாற்றின் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்றான அட்லாண்டிக் கடல் கடந்த அடிமை வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களை இது நினைவு கூர்கிறது.
இந்தத் தேதி ஐக்கியப் பேரரசில் நிறைவேற்றப்பட்ட அடிமை வர்த்தக ஒழிப்புச் சட்டத்தை (1807) குறிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்பதையும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இனவெறி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராட மக்களுக்குக் கற்பிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Justice in Action: Confronting History, Advancing Dignity, Empowering Futures” என்பதாகும்.