அடிமை வணிகம் மற்றும் அவற்றை ஒழித்தலை நினைவு கூறுவதற்கான சர்வதேச தினம் - ஆகஸ்ட் 23
August 25 , 2018 2446 days 939 0
உலகம் முழுவதும் ஆகஸ்ட் 23ஆம் தேதி அடிமை வணிகம் மற்றும் அவற்றை ஒழித்தலை நினைவு கூறுவதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது.
அட்லாண்டிக் அடிமை வணிகத்தை நினைவு கூறுவதற்காக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO-United Nations Educational, Scientific and Cultural Organisation) இத்தினத்தை தேர்ந்தெடுத்தது.
தற்பொழுது ஹய்தி என்றறியப்படும், சாந்தோ டோமிங்கோ தீவின் மேற்குப் பகுதியில் 1791ஆம் ஆண்டு ஏற்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் கிளர்ச்சியைக் குறிப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். அவ்வாறு விற்கப்பட்டவர்கள் அடிமை அமைப்பிற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஹய்தி புரட்சியானது 1804ஆம் ஆண்டில் அடிமைகளின் சுதந்திரம் மற்றும் விடுதலைக்கு இட்டுச் சென்றது.
இந்த நாள் முதன்முறையாக பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டது. குறிப்பாக 1998ஆம் ஆண்டு ஹய்தியிலும் 1999ஆம் ஆண்டு செனெகலிலும் கொண்டாடப்பட்டது.